அறிவிப்பு : அதிரடியான கட்டண திருத்தம் + 2 புதிய அன்லிமிடெட் ஐடியா திட்டங்கள்.!
புதிய திட்டங்களான ரூ.449/- மற்றும் ரூ.529/- ஆகிய ரீசார்ஜ் பொதிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடியா செல்லுலார் இப்போது ஒரு தீவிரமான கட்டண யுத்த பணிகளில் உள்ளது. நாள் ஒன்றிருக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும் அதன் புதிய ரூ.197/- திட்டத்தை வநேற்று தொடங்கி வழங்கிவருகிறது.
அதனைதொடரந்து இன்று ஐடியா நிறுவனம் தனது கட்டணத் திட்டங்களை திருத்தியுள்ளதுடன் சில புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களான ரூ.449/- மற்றும் ரூ.529/- ஆகிய ரீசார்ஜ் பொதிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி 77 நாட்கள் செல்லுபடியாகும்
முதலில், ஐடியா செல்லுலார் செய்த கட்டண திருத்தத்தை பற்றி பேசலாம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 70 நாட்களுக்கு வழங்கிய ரூ.498/- திட்டமானது இனி 77 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.449 மற்றும் ரூ.529/-
அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.449 மற்றும் ரூ.529 கட்டணத் திட்டத்தை இன்று தொடங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ரூ.498/- கட்டணத் திட்டத்தில் கிடைக்கும் அதே சலுகைகளை வழங்குகின்றன.

70 நாட்களுக்கு செல்லுபடியாகும்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங்) மற்றும் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

84 நாட்களுக்கு செல்லுபடியாகும்
ரூ.529 கட்டணத் திட்டத்தை பொறுத்தமட்டில், இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது தற்போது இந்த திட்டம் கேரள வட்டத்தில் உள்ள ஐடியா சந்தாதாரர்களுக்கு செல்லுபடியாகும். சிறந்த பகுதியாக இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மூன்று திட்டங்களும் திறந்த சந்தை திட்டங்களாகும்

குரல் அழைப்பு வரம்பு
துரதிருஷ்டவசமாக, குரல் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஏழு நாட்களுக்கு 1000 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதும் ஐடியா செல்லுலர் வெளிச்செல்லும் மாதாந்திர குரல் வரம்பை குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications