Home
News

ஐடியாவின் ரூ.199, ரூ.449 மற்றும் ரூ.509/-ல் அதிரடி திருத்தங்கள்.!

ஐடியா ரூ.199, ரூ.449 மற்றும் ரூ.509/- ஆகிய மூன்று திட்டங்களும் திருத்தப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம்.? இந்த திட்டங்களின் புதிய மற்றும் முந்தைய நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் குடியரசு தின 2018 திட்டங்களை அறிவித்த பின்னர் இதர டெலிகாம் நிறுவனங்களும் அதன் திட்டங்களை திருத்தி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலைப்பாட்டில் ஐடியா மிகவும் கணிக்கக்கப்பட்ட ஒரு அறிவிப்பை நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் இன்று தனது வரம்பற்ற ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களை திருத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தத்தின் கீழ் ஐடியாவின் மூன்று ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களைளின் நன்மைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐடியா ரூ.199, ரூ.449 மற்றும் ரூ.509/- ஆகிய மூன்று திட்டங்களும் திருத்தப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம்.? இந்த திட்டங்களின் புதிய மற்றும் முந்தைய நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்

வரம்பற்ற குரல் அழைப்புகள்

இப்போது இந்த மூன்று திட்டங்களும் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை ழங்குகின்றன. தரவு பயன்பாட்டுடன் இணைந்து, இந்த மூன்று திட்டங்கமே வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகின்றன.

39ஜிபி அளவிலான டேட்டா

39ஜிபி அளவிலான டேட்டா

ஐடியாவின் ரூ.199/- ப்ரீபெய்ட் கட்டண திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1.4ஜிபி அளவிலான தரவை வழங்கும். ஆக மொத்தம் இதன் செல்லுபடிக்காலத்தில் 39ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

114ஜிபி அளவிலான டேட்டா

114ஜிபி அளவிலான டேட்டா

மற்றொரு ப்ரீபெய்ட் கட்டண திட்டமான ரூ.449/- ஆனது, மொத்தம் 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1.4ஜிபி அளவிலான தரவை வழங்கும். ஆக மொத்தம் இதன் செல்லுபடிக்காலத்தில் 114ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

126ஜிபி அளவிலான டேட்டா

126ஜிபி அளவிலான டேட்டா

திருத்தம் பெற்ற மூன்றாவது திட்டமான ரூ.509/- ஆனது, மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1.4ஜிபி அளவிலான தரவை வழங்கும். ஆக மொத்தம் இதன் செல்லுபடிக்காலத்தில் 126ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ரூ.357/-ல் மறுபரிசீலனை இல்லை

ரூ.357/-ல் மறுபரிசீலனை இல்லை

துரதிர்ஷ்டவசமாக ஐடியா செல்லுலார் அதன் ரூ.357/- கட்டணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவில்லை. அந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டவையே வழங்கும். இதற்கு மாறாக, ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.349/- கட்டண திட்டத்தை திருத்தியுள்ளது. அந்த திட்டம் தற்போது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ரூ.309/-ல் மறுபரிசீலனை இல்லை

ரூ.309/-ல் மறுபரிசீலனை இல்லை

மேலும் ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ரூ.309/- திட்டத்தையும் மாற்றவில்லை, இந்த திட்டம் 70 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டவையே தொடர்ந்து வழங்குகிறது. இந்த திருத்தங்கள் ஐடியாவின் பல வட்டாரங்களில் இன்னும் அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை.

தமிழ்நாடு வட்டாரங்களில்

தமிழ்நாடு வட்டாரங்களில்

சென்னை உட்பட இதர தமிழ்நாடு வட்டாரங்களில் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய முடிகிறது. நாளை பிற்பகுதியில் மற்ற வட்டாரங்களில் இந்த திருத்தம் உருட்டப்படலாமென எதிர்பார்க்கிறோம். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கும், புதிய அறிவிப்பு மற்றும் திருத்தங்கள் பற்றிய செய்திகளுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

மூலம்: டெலிகாம்டால்க், இன்ஃபோ

Best Mobiles in India

English summary
Idea Cellular Revises Rs 199, Rs 449 and Rs 509 Prepaid Tariff Plans With 1.4GB Data Per Day On Offer. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X