ஜியோபோன் எதிரோலி : விரைவில் வருகிறது அட்காசமான ஐடியா மொபைல் போன்.!
ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த மொபைல் போன் பொறுத்தவரை ரூ.2500 முதல் துவங்கும் என ஐடியா நிறுவன தலைவர் ஹிமான்ஷூ கபானியா தெரிவித்தார்.
தற்சமயம் நாடு முழுவதும் ஜியோபோன் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் எதிரோலியாக பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகள் மற்றும் ஆபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் ஐடியா செல்லுலார் நிறுவனம் அதிரடியாக புதிய போன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இப்போது ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த மொபைல் பொறுத்தவரை பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதன்பின் ஜியோவிற்க்கு போட்டியாக பல நிறுவனங்கள் 4ஜி பீச்சர்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஐடியா :
ஐடியா நிறுவனம் ஜியோ 4ஜி பீச்சர்போன்களுக்கு போட்டியாக புதிய மொபைல்போனை தயாரிக்க திட்டமிட்டுள்ளது, அதன்பின் கூடிய விரைவில் இந்த மொபைல் போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2500:
ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த மொபைல் போன் பொறுத்தவரை ரூ.2500 முதல் துவங்கும் என ஐடியா நிறுவன தலைவர் ஹிமான்ஷூ கபானியா தெரிவித்தார். மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஐடியா நிறுவனம்.

மைக்ரோமேக்ஸ்:
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது ஜியோவிற்க்கு போட்டியாக 4ஜி பீச்சர்போன்களை தயாரிக்கும் திட்டத்தை கொண்டுள்ளது.அதன்பின் பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் பல ஆபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது.

ஜியோ:
இப்போது ரூ.1500 செலுத்தினால் இந்த ஜியோபோனை பெறமுடியும்,அதன்பின் மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த பணம் திரும்ப வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

ஒற்றை சிம் கார்டு:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி வசதி கொண்ட ஜியோபோன் பொறுத்தவரை ஒற்றை சிம் கார்டு சிம்கார்டு போடும் வசதி மட்டுமே உள்ளது. இரட்டை சிம் வசதி கொண்ட பீச்சர் போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications