அறிமுகம் : ஐடியாவின் புதிய அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 1ஜிபி/நாள் திட்டம்.!
இதன் விலை நிர்ணயம், செல்லுபடி காலம் மற்றும் இதர நன்மைகள் என்னென்ன.?
ஐடியா செல்லுலர் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரீசார்ஜ் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ பாணியிலான நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலா டேட்டாவையும் வழங்குகிறது.

அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும் இந்த புதிய ஐடியா திட்டமானது,சில வட்டங்களில் மட்டும் விலை மற்றும் செல்லுபடியாகும் காலத்தில் வேறுபடுகிறது. இதன் விலை நிர்ணயம், செல்லுபடி காலம் மற்றும் இதர நன்மைகள் என்னென்ன.?

ரோமிங் அழைப்பு நன்மை.!
ரூ.398/- என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த திட்டம், வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகள் மட்டுமின்றி, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.

இலவச எஸ்எம்எஸ் கிடையாது.!
நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவு வழங்கும் இந்த ரீசார்ஜ் துரதிருஷ்டவசமாக இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டங்களுக்கு ஏற்ப செல்லுப்படி வேறுபடும்.!
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெவ்வேறு தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உதாரணமாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில், இந்த பேக் 56 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

வட்டங்களுக்கு ஏற்ப விலையும் வேறுபடும்.!
சில வட்டாரங்களில் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். செல்லுபடி காலம் மட்டுமின்றி திட்டத்தின் விலை நிர்ணயமும் ஒவ்வொரு வட்டத்திற்கு ஏற்ப வேறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஐடியா அதன் ரூ.357 திட்டமொன்றையும் அறிமுகம் செய்தது.

இலவச ரோமிங் உட்பட.!
மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் அந்த திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்.டி.டி. குரல் அழைப்புகள் (இலவச ரோமிங் உட்பட) மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் ரூ.357/- பேக் தன்னுள் உள்ளடக்கியுள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல்
ஜியோவின் ரூ.399/- திட்டமானது, நாள் ஒற்றிக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகளை மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுப்படியாகும் வண்ணம் வழங்குகிறது, மறுகையில் ஏர்டெல் ஆனது அதே 70 நாட்கள் செல்லுபடி காலத்தின் கீழ் ரூ.448/-க்கு அதே மாதிரியான நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன் ரூ.399/- திட்டம்.!
இதேபோல் வோடபோன் நிறுவனம் தன் பங்கிற்கு ரூ.399/- திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் மொத்தம் 90ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவுடன், 6 மாதங்கள் செல்லுபடியாகும் வரம்பற்ற உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது. இருப்பினும், சில வட்டாரங்களில், இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகிறது


Click it and Unblock the Notifications