Home
News

அறிமுகம் :ஐடியாவின் ரூ.998 மற்றும் ரூ.1,298/- (நன்மைகள் ? செல்லுபடி).!

மற்றொரு ப்ரீபெயிட் திட்டமான ரூ.1,298/- ஆனது வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் சேர்த்து செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் வெறும் 7ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.

By Muthuraj

ஐடியா செல்லுலார் அதன் ரூ.998/- மற்றும் ரூ.1298/- என்கிற இரண்டு புதிய ப்ரீபெய்டு அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு திட்டங்களுமே வரம்பற்ற குரல் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

அறிமுகம் :ஐடியாவின் ரூ.998 மற்றும் ரூ.1,298/- (நன்மைகள் ? செல்லுபடி).!

சுவாரசியம் என்னவெனில், வேறெந்த டெலிகாம் நிறுவனமும் இந்த புதிய திட்டங்கள் கொண்டுள்ள விலைப்புள்ளியை கொண்டிருக்கும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கவில்லை. இந்த திட்டங்களின் செல்லுபடி காலத்தை பொறுத்தமட்டில், ரூ.998/- ப்ரீபெய்டு அன்லிமிடெட் தொகுப்பானது மொத்தம் 28 நாட்களுக்கு அதன் நன்மைகளை அளிக்கும் மறுகையில் உள்ள ரூ.1,298/- ஆனது, மொத்தம் 35 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுமே சில வட்டங்களில் மட்டுமே அணுக கிடைக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்த காலத்திற்கும் வெறும் 7ஜிபி

மொத்த காலத்திற்கும் வெறும் 7ஜிபி

ரூ.998/- ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக பேசினால், வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்துநாள் ஒன்றிற்கு 5 ஜிபி அளவிலான 4ஜி / 2ஜி தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் என்கிற கணக்கில் மொத்தம் 2800 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மற்றொரு ப்ரீபெயிட் திட்டமான ரூ.1,298/- ஆனது வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 7ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

அழைப்புகள் கட்டுப்படுத்தப்படும்.!

அழைப்புகள் கட்டுப்படுத்தப்படும்.!

வாரத்திற்கு 100 தனிப்பட்ட எண்கள் மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சேர்த்து, வாரத்திற்கு 1000 நிமிடங்கள் மற்றும் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்றும் அழைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ள வரம்புகளை மீறினால், கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ.897, ரூ.1,197, ரூ.697 போன்ற திட்டங்களுடன் கூட பொருந்தவில்லை.!

ரூ.897, ரூ.1,197, ரூ.697 போன்ற திட்டங்களுடன் கூட பொருந்தவில்லை.!

ஐடியா செல்லுலரின் ரூ.897, ரூ.1,197, ரூ.697 போன்ற திட்டங்களானது தினமும் 1.5ஜிபி முதல் 2.5 ஜிபி வரையிலான டேட்டா நன்மைகளை வழங்குகிறது என்பதும். இந்த மூன்று திட்டங்களுமே 70 நாட்களுக்கு நன்மைகளை அளிக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது

ஐடியா மேஜிக் கேஷ்பேக் சலுகைக்கு பொருத்தமானவை.!

ஐடியா மேஜிக் கேஷ்பேக் சலுகைக்கு பொருத்தமானவை.!

இந்த 2 திட்டங்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக அணுக கிடைக்கின்றன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களைக் ரீசார்ஜ் செய்யலாம். இந்த இரண்டு திட்டங்களுமே ஐடியா மேஜிக் கேஷ்பேக் சலுகைக்கு பொருத்தமானவை என்பதால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,300/- மதிப்பிலான நன்மைகள் கிடைக்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டம்.!

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டம்.!

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் கீழ், ரூ.199/- என்கிற சிறந்த ப்ரீபெய்ட் திட்டமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 தினங்களுக்கும் தினசரி மற்றும் வாராந்திர வரம்பு கொண்ட குரல் நன்மைகள் ஆகியவற்றை வழங்குகிறது. உடன் ரூ.309, ரூ.357, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற சிறந்த திட்டங்களும் அணுக கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Idea Cellular Launches Rs 998 and Rs 1298 Prepaid Unlimited Packs With Unlimited Voice. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X