ஐடியா ரூ.109/- அறிமுகம்: அன்லிமிடெட் அழைப்புகள் உடன் டேட்டாவையும் வழங்குகிறது.!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ரூ.109/- என்கிறவொரு புதிய நுழைவு-நிலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

|

ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ரூ.109/- என்கிறவொரு புதிய நுழைவு-நிலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டம் நிறுவனத்தின் வலைத்தளத்திலும், மைஐடியா பயன்பாட்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது குறிப்பிடப்பட்டுள்ள வட்டாரத்தில் இந்த ரூ.109/- ஆனது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக இருக்கலாம். இந்த ரூ.109/-ன் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன..? இதே விலையில் கிடைக்கும் இதர திட்டங்களை என்னென்ன? என்பதை விரிவாக காண்போம்.

செல்லுபடி

செல்லுபடி

இது நிச்சயமாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிரான ஒரு திட்டமல்ல. ஏனெனில் 28 நாட்களுக்கு பதிலாக இந்த ரூ.109/- ஆனது 14 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

இந்த ஐடியா ரூ.109/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், வரம்பற்ற குரல் அழைப்புகள், தரவு மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய மூன்று நன்மைகளும் கிடைக்கிறது. அதாவது 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவுடன், எந்த வலையமைப்பிற்கும் உடனான ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 14 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல்

மேலும் இந்த திட்டமானது, ஐடியா செல்லுலாரின் ரூ.93 திட்டத்தை ஒத்திருக்கிறது. இருப்பினும் அது பத்து நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்க, இது இரண்டு வாரங்கள் நன்மைகளை அளிக்கிறது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் "இதேபோன்ற விலை நிர்ணயம் கொண்ட" திட்டங்கள் 28 நாட்களுக்கு நன்மைகளை வழங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2ஜிபி அளவிலான டேட்டா

2ஜிபி அளவிலான டேட்டா

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டமானது, எந்த வரம்பும் இல்லாத குரல் அழைப்புகளையும், 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டா ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு அளிக்கிறது.

நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

மறுபுறத்தில், பார்தி ஏர்டெல் நிறுவன,மானது ரூ.93/- ப்ரீபெய்ட் கட்டண திட்டத்தின் கீழ் (தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு) 1ஜிபி அளவிலான டேட்டாவும், ரீசார்ஜ் தேதியிலிருந்து 28 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

சில பயனர்களுக்கு மட்டுமே

சில பயனர்களுக்கு மட்டுமே

ஜியோவை தவிர்த்து இதர இரண்டு (ஏர்டெல் மற்றும் ஐடியா) திட்டங்களும் துரதிருஷ்டவசமானவைகள் தான். ஏனெனில் ஏர்டெல் திட்டமானது சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஐடியா செல்லுலார் திட்டமானது சில வட்டங்களுக்கு என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

8 திட்டங்களின் திருத்தம்

8 திட்டங்களின் திருத்தம்

சமீபத்தில் ஐடியா செல்லுலார் நிறுவனமானது, அதன் நிர்வாணா திட்டத்தின் இருக்கும் மொத்த எட்டு திட்டங்களையும் முழுமையாக திருத்தியமைத்து அறிவித்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ் சிறந்த திருத்ததை பெற்றுள்ள திட்டமாக ரூ.389/- திகழ்கிறது. ஐடியா செல்லுலார் ஆனது எட்டு ப்ரீபெயிட் திட்டங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நிர்வாணா திட்டத்தின் கீழ் வழங்குகிறது. அதில் முதல் நான்கு திட்டங்களானது ரூ.1,000/-க்குள் கிடைக்கும் நிர்வாணா மதிப்பு திட்டங்களாகும். அதாவது ரூ.389, ரூ.499, ரூ.649/- மற்றும் ரூ.999/- ஆகும்.

20ஜிபி அளவிலானா டேட்டா

20ஜிபி அளவிலானா டேட்டா

அடிப்படை திடமான ரூ.389/- ஆனது இனி வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகள் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை வழங்கும் உடன் பில்லிங் சுழற்சிக்கு 20 ஜிபி அளவிலான தரவும் வழங்கும். மறுகையில் உள்ள ஐடியாவின் ரூ.499/- திட்டமானது 40ஜிபி அளவிலான டேட்டாவையும், ரூ.649/- ஆனது 50 ஜிபி அளவிலான டேட்டாவையும் மற்றும் ரூ.999/- ஆனது மாதத்திற்கு 80ஜிபி அளவிலானா டேட்டாவையும் வழங்கும்.

மொத்தம் 3000 எஸ்எம்எஸ்

மொத்தம் 3000 எஸ்எம்எஸ்

இந்த மூன்று திட்டங்களுமே வரம்பற்ற ரோமிங் அழைப்புகள் உட்பட ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மையையும் வழங்குகின்றன. அதாவது பில்லிங் சுழற்சிக்கு மொத்தம் 3000 எஸ்எம்எஸ்களை வழங்குமென்று அர்த்தம். மேலும், இந்த திட்டங்கள் அனைத்துமே ஐடியா தரவு மாற்றம் (டேட்டா ரோல்ஓவர்) செய்வதற்கு தகுதியானவைகளாகும். இருப்பினும் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக 200ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பரிமாற்றம் செய்ய முடியும்.

20% தள்ளுபடி; ஐஎஸ்டி கிடையாது

20% தள்ளுபடி; ஐஎஸ்டி கிடையாது

இறுதியாக, ஐடியா செல்லுலார் நிர்வாணா மதிப்பு திட்டங்களானது பேமிலி பெனிபிட் வாய்ப்பின் கீழ் 20% தள்ளுபடியையும் வழங்குகிறது மற்றும் இந்த திட்டங்கள் எதுவுமே ஐஎஸ்டி அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை திட்டமான ரூ.389/- ஐ தவிர, மீதமுள்ள மூன்று திட்டங்களுமே இலவச ஐடியா நியூஸ் & மேகசின் சந்தா, ஐடியா செலெக்ட் மெம்பர்ஷிப் மற்றும் சைல்ட் செக்யூர் ஆகிய அணுகல்களை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐடியா செல்லுலார் நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள்

ஐடியா செல்லுலார் நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள்

ரூ.1000/-க்கு மேலான நிர்வாண திட்டங்களானது நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள் எனப்படுகிறது. அதாவது ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999/- மற்றும் ரூ.2,999/- ஆகிய நான்கு திட்டங்களும் ஐடியா செல்லுலார் நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள் ஆகும். இனி இந்த திட்டங்களானது அதே வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கினாலும், தரவு நன்மையில் மாறுபடுகிறது. அதன்படி ரூ.1,299/- திட்டமானது தற்போது 100ஜிபி தரவை வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.1,699/- ஆனது 150ஜிபி வழங்குகிறது, ரூ.1,999/- ஆனது 200ஜிபி வழங்குகிறது மற்றும் இறுதியாக ரூ.3,999/- ஆனது நம்பமுடியாத 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா

இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா

ரூ.1,299, ரூ.1,699/- மற்றும் ரூ.1,999/- திட்டங்களுடன் 4 மாத இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா கிடைக்கும் மற்றும் ரூ.2,999/- திட்டத்துடன் ஒரு வருடத்திற்கான இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா கிடைக்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் பேமிலி பெனிபிட் வாய்ப்பின் கீழ் 20% தள்ளுபடியையும் வழங்குகின்றன. ஐஎஸ்டி அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.2,999/- ஆனது அதன் பயனர்களுக்கு 200 நிமிட இலவச ஐஎஸ்டி அழைப்புகளையும், மீதமுள்ள மூன்று திட்டங்களும் 100 ஐஎஸ்டி நிமிடங்களையும் வழங்குகின்றன.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
மைஐடியா பயன்பாட்டின்கீழ்

மைஐடியா பயன்பாட்டின்கீழ்

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த புதிய திட்டங்கள் இன்னும் பிரதிபலிக்கப்படவில்லை. இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களில் காட்சிப்படலாம், இப்போது வரையிலாக வாடிக்கையாளர்கள் அவர்களின் மைஐடியா பயன்பாட்டின்கீழ் உள்ள அக்கவுண்ட்ட்டிற்குள் நுழைவதின் வழியாக திருத்தப்பட்ட நன்மைகளைப் பார்க்கலாம். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Idea Cellular Launches Rs 109 Prepaid Plan. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X