ஐடியா : ரூ.297/- மற்றும் ரூ.447/-க்கு அதிரடியான டேட்டா திட்டங்கள் அறிமுகம்.!

Written By:

நேற்றைக்கு முந்தைய தினம் ஏர்டெல் அதன் டிடிஎச் ஆண்ட்ராய்டு செயல்படுத்தப்பட்டசெட் டாப் பாக்ஸ் சேவையயை அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து நேற்று ஜியோவின் சமீபத்திய தண் தணா தண் ஆபருக்கு எதிராக 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் இரண்டு புதிய 4ஜி டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்தது.

பொறுமையாக காத்திருந்த ஏர்டெல் நிறுவனமே பதிலடி சலுகைகளை அறிமுகதம் செய்த பின்னர், ஐடியா செல்லுலார் நிறுவனமும் புதிய திட்டங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட இன்று இரண்டு புதிய திட்டங்களை, ஐடியா அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரூ.297/- மற்றும் ரூ.447/-

ரூ.297/- மற்றும் ரூ.447/-

இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் என்று கூறப்படும் ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அறிவித்தது தண் தணா தண் வாய்ப்பை எதிர்கொள்ளும் முனைப்போடு ரூ.297/- மற்றும் ரூ.447/- என்ற இரண்டு புதிய திட்டங்களைம் அதன் செங்மெண்ட்டேட் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

செல்லுபடி

செல்லுபடி

ரூ.297/- திட்டமானது ஐடியா டூ ஐடியா உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கிறது மற்றும் இது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

1ஜிபி

1ஜிபி

ரூ.447/- திட்டமானது எந்த நெட்வெர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கிறது மற்றும் இதுவும் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

300 நிமிடங்கள்

300 நிமிடங்கள்

அழைப்புகளை பொறுத்தமட்டில் ரூ.297 திட்டம் நாளொன்றுக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் குரல் அழைப்புகளை வழங்கும்.

எல்லை

எல்லை

மறுபக்கம் ரூ.447 திட்டமானது 70 நாட்களுக்கும் மொத்தமாக வெறும் 3000 நிமிடங்கள் அழைப்புகளை மட்டுமே வழங்குகிறது. இந்த எல்லை முடிந்த பிறகு 30பைசா / நிமிடம் என்ற கட்டண விகிதத்தை பெறுவீர்கள்.

4ஜி ஐடியா சிம்

4ஜி ஐடியா சிம்

ஐடியா வழங்கும் இந்த புதிய சலுகைகள் 4ஜி ஐடியா சிம் அட்டை கொண்ட 4ஜி கைபேசி கொண்டுள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Idea Cellular to launch Rs 297 & Rs 447 plans with daily 4G data. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot