வெறும் ரூ.19/-க்கு ஏர்டெல் - ஜியோவிற்கு 'செக்' வைத்த ஐடியா செல்லுலார்.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- ப்ரீபெய்ட் திட்டத்தை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
ஒவ்வொரு மாதமும், ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் அல்லது மேம்படுத்திய வண்ணம் உள்ளது. அப்படியாக இந்த மாதம் ஐடியா செல்லுலார் அதன் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கான ரூ.19/- ஐ அறிவித்துள்ளது.
இந்த ஐடியா ரூ.19/- ஆனது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.19/- உடன் நேரடியாக போட்டியிடுவதோடு சேர்த்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- ப்ரீபெய்ட் திட்டத்தை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

செல்லுபடி
அதாவது, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் தரவு நன்மைகளையும் வழங்கும் ஜியோ ரூ.19/-ஐ போல் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்காமல், ஐடியா ரூ.19/- ஆனது மொத்தம் இரண்டு நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.

டேட்டா நன்மை
ரூ.19/- திட்டத்துடன் சேர்த்து, ஐடியா செல்லுலார் ஆனது ரூ.9/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது, இது ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. நன்மைகளை பொறுத்தமட்டில், ஐடியா ரூ.19/- ஆனது ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், 150எம்பி அளவிலான டேட்டா, இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது.

வாய்ஸ் நன்மைகள்
இதன் வாய்ஸ் நன்மைகள், நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 100 நிமிடங்கள் மட்டுமே என்கிற வரம்பை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ரூ.9/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 100எம்பி அளவிலான டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.19
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- ஆனது எந்த வரம்பும் இல்லாத வாய்ஸ் நன்மைகள், 150எம்பி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 20 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.19
பார்தி ஏர்டெல் நிறுவனத்தை பொறுத்தவரை ரூ.19/- மட்டுமின்றி, ரூ.9/- மற்றும் ரூ.23/- என மொத்தம் 3 சூப்பர் பட்ஜெட் திட்டங்களை கொண்டுள்ளது. குறிப்பாக ஏர்டெல் ரூ.19/- ஆனது வரம்பற்ற வாய்ஸ், 150எம்பி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது.

லிமிடெட் வேலிடிட்டி
இந்த அனைத்து திட்டங்களுமே லிமிடெட் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை தேடுகிற பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளன. ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் இதர சிறந்த திட்டங்களை பொறுத்தவரை : ரூ.109, ரூ.149, ரூ.199, ரூ.357, ரூ.399, ரூ.449/- மற்றும் ரூ.509/- ஆகியவைகளை கூறலாம்.


Click it and Unblock the Notifications