அறிமுகம் : ஐடியா ரூ.227/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?
வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்கள் எச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், 4ஜி டேட்டா, போன்ற சேவைகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடியா நிறுவனம் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ரூ.227/- ப்ரீபெயிட் திட்ட்தில் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது, மேலும் இந்த புதிய திட்டம் பொறுத்தவரை பல்வேறு ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியா நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.227/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 39.4ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் பல்வேறு சிறப்புகளைப் பார்ப்போம்.

ரூ.227/- ப்ரீபெயிட் திட்டம்:
ஐடியாவின் ரூ.227/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்றவை இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு குறிப்பிட்ட சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று ஐடியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோல்ட்இ :
கடந்த மாதம் ஐடியா நிறுவனம் ஆறு வட்டாரங்களில் அதன் வோல்ட்இ சேவை அறிமுகம் செய்தது, பின்பு கூடுதலாக ஒன்பது வட்டராங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டராங்களில் அதன் வோல்ட்இ சேவையை துவங்கியது. தற்சமயம் இந்தியா முழுவதும் 20 வட்டாரங்களில் ஐடியா நிறுவனம் அதன் வோல்ட்இ சேவையை வழங்கி வருகிறது.

ஐடியா நிறுவனம்:
இப்போது ஐடியா நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் முதல் வோல்ட்இ சேவையை மேற்கொள்வோருக்கு 10ஜிபி டேட்டாவும், பின்பு நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா என மொத்தம் 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வாய்ஸ் கால்:
வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்கள் எச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், 4ஜி டேட்டா, போன்ற சேவைகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வோல்ட்இ சேவைக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்று ஐடியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்:
தற்சமயம் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஐடியா வோல்ட்இ வழங்கப்படும், பின்பு விரைவில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த வோல்ட்இ வழங்கப்பட இருக்கிறது. 4ஜி கிடைக்காத இடங்களில் தானாக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications