ஐடியா அதிரடி: அதன் 10 வரம்பற்ற காம்போ திட்டங்களில் மேலுமொரு திருத்தம்.!

Written By:

ஐடியா செல்லுலர் நிறுவனம், அதன் வரம்பற்ற காம்போ திட்டங்களில் மேலுமொரு திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காம்போ திட்டங்களின் கீழ் கிடைக்கும் இலவச குரல் ரோமிங் அழைப்பு நன்மையில், இனி ஐடியா அல்லாத நெட்டவர்க்குகளுக்கு இடையிலேயான தேசிய ரோமிங் அழைப்பு பயனும் கிடைக்கும் என்று ஐடியா தெரிவித்துள்ளது.

ஐடியா அதிரடி: அதன் 10 வரம்பற்ற காம்போ திட்டங்களில் மேலுமொரு திருத்தம்!

ஐடியா சமீபத்தில் தான், அதன் வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு நன்மைகளை வழங்கும் காம்போ கட்டணத் திட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறது. அந்த திட்டங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தம், அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் பயனர்களுக்கு மிகவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக, வெளியூர் பயணங்களின் போது குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு பல்வேறு வகையான கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்த புதிய நடவடிக்கையின் வாயிலாக - நீங்கள் ஐடியாவின் வரம்பற்ற காம்போ திட்டத்தில் இருந்தால் - ஐடியா நெட்வொர்க் அல்லாத சேவைகளுக்கும் கூட ரோமிங் சேவைகள் இலவசம், உடன் வழக்கமான குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை இலவசமாக பெறலாம். இந்த திருத்தமானது, நேற்று முதல் பல்வேறு வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா அதிரடி: அதன் 10 வரம்பற்ற காம்போ திட்டங்களில் மேலுமொரு திருத்தம்!

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் காம்போ திட்டங்களின் பட்டியல்: ரூ.309, ரூ.357, ரூ.398, ரூ.449, ரூ.499, ரூ.599, ரூ.697, ரூ.799, ரூ.897/- மற்றும் ரூ.1197/- ஆகும்.

முன்பு கூறியதுபோல், ஐடியா செல்லுலர் அண்மையில் அதன் வரம்பற்ற காம்போ கட்டணத் திட்டங்களை சீரமைத்தது. வரம்பற்ற காம்போ பிரிவின் கீழ் அனைத்து திட்டங்களும் தற்போது வெளிச்செல்லும் குரல் அழைப்புகளை வழங்குகின்றன, மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் தரவு பயன் மற்றும் செல்லுபடியாகும் காலம் மட்டுமே வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம் : டெலிகாம்டால்க்.இன்ஃபோEnglish summary
Idea Cellular Free Roaming Benefit Can Now Be Availed in National Roaming on Non-Idea Network. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot