8 ஐடியா திட்டங்களில் அதிரடி திருத்தம்; 20ஜிபி - 300ஜிபி + வாய்ஸ் நன்மைகள்.!
ஐடியா செல்லுலார் ஆனது எட்டு ப்ரீபெயிட் திட்டங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நிர்வாணா திட்டத்தின் கீழ் வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா ஆகியோருடன் போட்டியிடும் நோக்கத்தின்கீழ் ஐடியா செல்லுலார் நிறுவனமானது, அதன் நிர்வாணா திட்டத்தின் இருக்கும் மொத்த எட்டு திட்டங்களையும் முழுமையாக திருத்தியமைத்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ் சிறந்த திருத்ததை பெற்றுள்ள திட்டமாக ரூ.389/- திகழ்கிறது. இனி இந்த திட்டமானது தாராளமாக பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியாவின் ரூ.399/- திட்டத்தை எதிர்க்கலாம். அதென்ன திருத்தம்.? இதர நிர்வாணமா திட்டங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள திருத்தங்கள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்போம்.

ஐடியா செல்லுலார் நிர்வாணா மதிப்பு திட்டங்கள்
மேற்க்குறிப்பிட்டபடி, ஐடியா செல்லுலார் ஆனது எட்டு ப்ரீபெயிட் திட்டங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நிர்வாணா திட்டத்தின் கீழ் வழங்குகிறது. அதில் முதல் நான்கு திட்டங்களானது ரூ.1,000/-க்குள் கிடைக்கும் நிர்வாணா மதிப்பு திட்டங்களாகும். அதாவது ரூ.389, ரூ.499, ரூ.649/- மற்றும் ரூ.999/- ஆகும்.

20ஜிபி அளவிலானா டேட்டா
அடிப்படை திடமான ரூ.389/- ஆனது இனி வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகள் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை வழங்கும் உடன் பில்லிங் சுழற்சிக்கு 20 ஜிபி அளவிலான தரவும் வழங்கும்.

80ஜிபி அளவிலானா டேட்டா
மறுகையில் உள்ள ஐடியாவின் ரூ.499/- திட்டமானது 40ஜிபி அளவிலான டேட்டாவையும், ரூ.649/- ஆனது 50 ஜிபி அளவிலான டேட்டாவையும் மற்றும் ரூ.999/- ஆனது மாதத்திற்கு 80ஜிபி அளவிலானா டேட்டாவையும் வழங்கும்.

மொத்தம் 3000 எஸ்எம்எஸ்
இந்த மூன்று திட்டங்களுமே வரம்பற்ற ரோமிங் அழைப்புகள் உட்பட ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மையையும் வழங்குகின்றன. அதாவது பில்லிங் சுழற்சிக்கு மொத்தம் 3000 எஸ்எம்எஸ்களை வழங்குமென்று அர்த்தம்.

அதிகபட்சமாக 200ஜிபி
மேலும், இந்த திட்டங்கள் அனைத்துமே ஐடியா தரவு மாற்றம் (டேட்டா ரோல்ஓவர்) செய்வதற்கு தகுதியானவைகளாகும். இருப்பினும் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக 200ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பரிமாற்றம் செய்ய முடியும்.

20% தள்ளுபடி; ஐஎஸ்டி கிடையாது
இறுதியாக, ஐடியா செல்லுலார் நிர்வாணா மதிப்பு திட்டங்களானது பேமிலி பெனிபிட் வாய்ப்பின் கீழ் 20% தள்ளுபடியையும் வழங்குகிறது மற்றும் இந்த திட்டங்கள் எதுவுமே ஐஎஸ்டி அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

செலெக்ட் மெம்பர்ஷிப் மற்றும் சைல்ட் செக்யூர்
அடிப்படை திட்டமான ரூ.389/- ஐ தவிர, மீதமுள்ள மூன்று திட்டங்களுமே இலவச ஐடியா நியூஸ் & மேகசின் சந்தா, ஐடியா செலெக்ட் மெம்பர்ஷிப் மற்றும் சைல்ட் செக்யூர் ஆகிய அணுகல்களை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐடியா செல்லுலார் நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள்
ரூ.1000/-க்கு மேலான நிர்வாண திட்டங்களானது நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள் எனப்படுகிறது. அதாவது ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999/- மற்றும் ரூ.2,999/- ஆகிய நான்கு திட்டங்களும் ஐடியா செல்லுலார் நிர்வாணா அட்வான்டேஜ் திட்டங்கள் ஆகும்.

நம்பமுடியாத 300ஜிபி
இனி இந்த திட்டங்களானது அதே வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கினாலும், தரவு நன்மையில் மாறுபடுகிறது. அதன்படி ரூ.1,299/- திட்டமானது தற்போது 100ஜிபி தரவை வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.1,699/- ஆனது 150ஜிபி வழங்குகிறது, ரூ.1,999/- ஆனது 200ஜிபி வழங்குகிறது மற்றும் இறுதியாக ரூ.3,999/- ஆனது நம்பமுடியாத 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா
ரூ.1,299, ரூ.1,699/- மற்றும் ரூ.1,999/- திட்டங்களுடன் 4 மாத இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா கிடைக்கும் மற்றும் ரூ.2,999/- திட்டத்துடன் ஒரு வருடத்திற்கான இலவச ஐடியா போன் செக்யூர் சந்தா கிடைக்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் பேமிலி பெனிபிட் வாய்ப்பின் கீழ் 20% தள்ளுபடியையும் வழங்குகின்றன.


200 நிமிட இலவச ஐஎஸ்டி
ஐஎஸ்டி அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.2,999/- ஆனது அதன் பயனர்களுக்கு 200 நிமிட இலவச ஐஎஸ்டி அழைப்புகளையும், மீதமுள்ள மூன்று திட்டங்களும் 100 ஐஎஸ்டி நிமிடங்களையும் வழங்குகின்றன.

மைஐடியா பயன்பாட்டின்கீழ்
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த புதிய திட்டங்கள் இன்னும் பிரதிபலிக்கப்படவில்லை. இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களில் காட்சிப்படலாம், இப்போது வரையிலாக வாடிக்கையாளர்கள் அவர்களின் மைஐடியா பயன்பாட்டின்கீழ் உள்ள அக்கவுண்ட்ட்டிற்குள் நுழைவதின் வழியாக திருத்தப்பட்ட நன்மைகளைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications