ஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா.! இனி ஏர்டெலுக்கு விழும் அடி.!

அப்படியானதொரு போட்டி திட்டம் தன ஐடியாவின் ரூ.499 பிளான்.!

|

முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் அறிமுகமான, ரிலையன்ஸ் ஜியோவின் விளைவால், ஏர்டெல், ஏர்செல், ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா போன்ற இந்தியாவின் மாபெரும் டெலிகாம் நிறுவனங்கள் காணாமல் போகத்தொடங்கின. பின்னர் சுதாரித்துக்கொண்டு, மெல்ல மெல்ல போட்டிபோட ஆரம்பித்தன. இருந்தாலும் முதல் இடத்தை அடைய முடியவில்லை, ஜியோ இருக்கும் வரை அதற்கு சாத்தியமும் இல்லை என்பதை நான்கும் அறிந்துகொண்ட இதர நிறுவனங்கள், இரண்டாம் இடத்திற்கான போட்டியை தொடங்கின.

ஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா.! இனி ஏர்டெலுக்கு அடி.!

அதன் விளைவாக, ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலாருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. வாரம் ஒரு கட்டண திட்டமும் அதற்கான போட்டி திட்டங்களும் வெளியாகின. அப்படியானதொரு போட்டி திட்டம் தன ஐடியாவின் ரூ.499 பிளான்.!

ஐடியா செல்லுலாரின் 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா கிடைக்கிறது.!

ஐடியா செல்லுலாரின் 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா கிடைக்கிறது.!

பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடும் முனைப்பின் கீழ், ஐடியா செல்லுலார் அதன் ரூ.499/- என்கிற மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர் ஆன ஐடியா செல்லுலாரின் 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மொத்த டேட்டா நன்மை என்ன.? செல்லுபடியாகும் காலம் என்ன.? டேட்டா தவிர்த்து வேறென்ன நன்மைகள் கிடைக்கும்.?

எந்த ரீசார்ஜ் போர்ட்டல் மூலமாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.!

எந்த ரீசார்ஜ் போர்ட்டல் மூலமாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.!

மொத்தம் 164 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த அடியா ரூ.499/- ஆனது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம். டேட்டா நன்மையுடன் சேர்த்து, இந்த ஐடியா திட்டம் குரல் அழைப்புகளையும், எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. ஐடியாவின் இந்த திட்டம் பல்வேறு வட்டங்களில் செல்லுபடியாகும் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது வேறு எந்த ரீசார்ஜ் போர்ட்டல் மூலமாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10கேபி டேட்டாவின் விலை 4 பைசா என்கிற நிலைக்கு வந்துள்ளது.!

10கேபி டேட்டாவின் விலை 4 பைசா என்கிற நிலைக்கு வந்துள்ளது.!

இந்த புதிய திட்டம், ஐடியாவின் வரம்பற்ற ரீசார்ஜ் போர்ட்டின் ஒரு பகுதியாகும், ஏர்டெல் திட்டங்களை மட்டுமின்றி, இது ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற காம்போ திட்டங்களையும் குறிவைத்து வெளியாகியுள்ளது என்பது வெளிப்படை. ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவையு வழங்கும் இந்த திட்டத்தின் விளைவாக, ஐடியாவில் 10கேபி டேட்டாவின் விலை 4 பைசா என்கிற நிலைக்கு வந்துள்ளது. உடன் நாளுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்கிற வரம்பினை கொண்ட வாய்ஸ் நன்மைகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

ஒரு திறந்த வெளி சந்தை திட்டமாகும்.!

ஒரு திறந்த வெளி சந்தை திட்டமாகும்.!

பார்தி ஏர்டெல் ரூ.499/-ன் நன்மைகளை பொறுத்தவரை, உண்மையிலேயே வரம்பற்ற டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதாவது 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மைகக்கு பிறகு 128 Kbps வேகத்திலான வரம்பற்ற டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில் குரல் அழைப்புகளுக்கு எந்த விதமான தினசரி மற்றும் மாதாந்திர வரம்பும் கிடையாது. மேலும் இந்த ஏர்டெல் ரூ.499/- ப்ரீபெய்ட் திட்டம் என்பது ஒரு திறந்த வெளி சந்தை திட்டமாகும், ஆனால், ஐடியா செல்லுலார் ரூ.499 என்பது சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும் ஒரு திட்டமாகும்.

ஒரு ஜிபி டேட்டா மதிப்பானது ரூ.3.04/-க்கு வந்துள்ளது.!

ஒரு ஜிபி டேட்டா மதிப்பானது ரூ.3.04/-க்கு வந்துள்ளது.!

ஐடியாவின் ரூ.499/- திட்டத்தின்படி, ஐடியா செல்லுலாரின் ஒரு ஜிபி டேட்டா மதிப்பானது ரூ.3.04/-க்கு வந்துள்ளது. சமீபத்தில் ஐடியா ரூ.53/- மற்றும் ரூ.92/- என்கிற அதன் புல்லெட் டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-ஆன் திட்டங்கள் ஆகும். அதாவது இந்த திட்டங்கள் முறையை 3ஜிபி மற்றும் 6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். முக்கிய குறிப்பு: நிறுவனத்தின் அன்லிமிடெட் திட்டங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு தான், இதுவொரு ஆட்-ஆன் திட்டமாக செயல்பட்டு, கூடுதல் டேட்டாவை வழங்கும். மற்ற பயனர்களுக்கு, இவைகள் ஒரு சாதாரண டேட்டா திட்டமாக தான் அணுக கிடைக்கும்.

6 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

6 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.92/- ஆனது மொத்தம் 6 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். இதன் செல்லுபடி காலம் ஏழு நாட்கள் ஆகும். இருப்பினும், இந்த ஆட்-ஆன் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஆனது, பயனர்களின் நடப்பு திட்டங்களின் படி மாறுபடும் என்பதையும் குறிப்பிடத்தக்கது. அதாவது வரம்பற்ற குரல் அல்லது காம்போ பேக் சந்தாதாரர்களுக்கு அவர்களின் திட்டம் செல்லுபடியாகும் காலம் வரை 6ஜிபி நீடிக்கும்.

3 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

3 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.53/- ஆனது மொத்தம் 3 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். இதன் செல்லுபடி காலம் ஒரு நாள் மட்டுமே ஆகும். இந்த திட்டமும் ரூ.92/- போன்றே பயனர்களின் நடப்பு திட்டங்களின் படி மாறுபடும் என்பதையும் குறிப்பிடத்தக்கது. அதாவது வரம்பற்ற குரல் அல்லது காம்போ பேக் சந்தாதாரர்களுக்கு அவர்களின் திட்டம் செல்லுபடியாகும் காலம் வரை 3 ஜிபி நீடிக்கும். புல்லெட் ஆட்-ஆன் பேக்ஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐடியா செல்லுலார் திட்டங்கள் ஆனது, டேட்டா நன்மையை மட்டும் வழங்கும் அன்லிமிடெட் பிளான்களுக்கு பொருந்தாது என்பதும், இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சம், அதாவது பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த ரீசார்ஜ் சுழற்சிக்கு கொண்டு செல்லும் ஆதரவு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆட்-ஆன் பேக்ஸ் :

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆட்-ஆன் பேக்ஸ் :

கடந்த வாரம், பார்தி ஏர்டெல், அதன் இரண்டு ஆட் ஆன் திட்டங்களை அறிவித்ததும், அது ரூ.92 மற்றும் ரூ.49/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நன்மைகளை பொறுத்தவரை, முறையே 3ஜிபி மற்றும் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது, 3 மற்றும் 7 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டங்கள், ஐடியாவின் ஆட்-ஆன் திட்டங்களை போலவே, வரம்பற்ற குரல் மற்றும் வரம்பற்ற காம்போ திட்டங்களின் செல்லுபடிக்கு ஏற்றபடி செல்லுபடியை மாற்றிக்கொள்ளும். மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்ற ஆட்-ஆன் திட்டங்களை கொண்டுள்ளது. அவைகள் ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- என்கிற விலையின் கீழ் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular Comes Forward With Rs 499 Prepaid Plan Offering 164GB Data for 82 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X