Just In
- 2 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 4 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 4 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 5 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
அட இப்படியா பண்ணுவீங்க.. ஜூஸ் ஆர்டர் போட்டவங்களுக்கு சோப்புத்தூள் திரவம்.. பதறி ஓடிய கஸ்டமர்கள்
- Movies
விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட லைகா.. இது முதல்முறை அல்ல ஏற்கனவே நடந்து இருக்கு தெரியுமா?
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரூ.309/-க்கு 1.5ஜிபி/நாள்: ஐடியாவின் அதிரடியால் ஜியோ வாசிகளுக்கு லாபம் ஏன்.?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் ஹேப்பி நியூ இயர் 2018 பெயரின் கீழ் ரூ.299/- என்கிற கட்டண திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் ஜியோவின் வழக்கமான பாணியிலான நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா என்றில்லாமல் நாள் ஒன்றிற்கு 1.2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது ரூ.309/- கட்டணத் திட்டத்தில் அதிரடியான திருத்தத்தை செய்துள்ளது. அதென்ன திருத்தம்.? முன்னர் கிடைத்த ரூ.309/-ன் நன்மைகள் என்ன.? தற்போது கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.

இனி 1.5ஜிபி
நேற்றுவரை நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கிய ஐடியாவின் ரூ.309/- ஆனது இனி 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

திறந்தவெளி சந்தை திட்டம்
இந்த மாற்றம் ஏற்கனவே செயல்பட்டுள்ளதால், இனி செய்யப்படும் ரீசார்ஜ் ஆனது கூடுதல் நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் சிறந்த என்னவென்றால் இது ஒவ்வொரு ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் கிடைக்குமொரு திறந்தவெளி சந்தை திட்டமாகும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்
ஐடியா இந்த மாற்றத்தை அமைதியாக செய்துள்ளது. திருத்தப்பட்ட ரூ.309/- என்கிற கட்டணத் திட்டமானது டேட்டா நன்மைகளுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ரோமிங் அழைப்புகள் உட்பட "வரம்பற்ற" குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

குரல் அழைப்புகளுக்கு வரம்பு
இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் குரல் அழைப்புகளுக்கு வரம்பு உண்டு. அதாவது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்கிற வரம்பு கொண்டு ரூ.309/-ன் குரல் அழைப்பு நன்மைகள் மூடி வைக்கப்படுகின்றன.

இரண்டு புதிய திட்டங்கள்
நினைவூட்டும் வண்ணம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.199/- மற்றும் ரூ.299/- என்கிற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டங்கள் முறையே நாள் ஒன்றிற்கு 1.2ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுப்படியாகும் வண்ணம் வழங்குகிறது.

சிறந்த தரவு நன்மை
இந்த திட்டங்கள் ஐடியா செல்லுலார் மற்றும் இதர தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரூ.299/- திட்டமானது கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த தரவு நன்மைகளை வழங்குவதால் இதே விலை நிர்ணயத்தின் கீழ் இன்னும் பல திட்டங்கள் வெளியாகலாம்.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
இந்த கட்டண யுத்தத்தின்கீழ் அழுத்தம் பெறாத ஒரே நிறுவனமான ஏர்டெல் உள்ளது. ஏனெனில் ஏர்டெல் ஏற்கனவே அதன் ரூ.349/- என்கிற கட்டணத்திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான தரவை அளிக்கிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

எந்தவிதமான வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல்
ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் கொண்டிருக்கும் ஒரு பிரதான பின்னடைவு என்னவென்றால் - வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கவில்லை. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை எந்தவிதமான வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.

வோல்ட் சேவை
மறுகையில் உள்ள, வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் 1000 நிமிடங்கள்ஏ என்கிற வரம்புகளை கொண்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் வோடபோன் நிறுவனம் அதன் வோல்ட் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், ஐடியா 2018-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வோல்ட் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளன.

மிக உயர்ந்த தரவு வழங்கல்
கூறப்படும் வதந்திகள் உண்மையானால், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரு நிறுவனங்களுமே வோல்ட் சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோவை போன்றே ஆயுட்கால இலவசமாக குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும். பின்னர் மிக உயர்ந்த தரவு வழங்கலின் அடிப்படையில் மட்டுமே போட்டிகள் முன்னெடுக்கப்படும். இதன் விளைவாக ஏற்கனவே பல ஜிபி-களில் புரளும் ஜியோவாசிகளுக்கு கூடுதல் டேட்டா நன்மைகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470