அறிமுகம் : ரூ.198/-க்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் திட்டம்.!

Written By:

ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.199/- என்ற புதிய திட்டத்தை (நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் திட்டம்) அறிவித்துள்ள நிலைப்பாட்டில், ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய கட்டணத் திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ.198/-க்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் திட்டம்.!

அறிமுகமாகியுள்ள ரூ.198/- மற்றும் ரூ.357/- என்ற இரண்டு ரீசார்ஜ்களுமே பயனர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா (4ஜி / 3ஜி / 2ஜி) வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மிகவும் வெளிப்படையாகவே இந்த திட்டங்கள் ஏற்றல் நிறுவனத்தின் ரூ.199/- மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டத்துடன் போட்டியிடுகின்றது.

டெலிகாம் டாக் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, இந்த புதிய ஐடியா திட்டங்கள் ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது மற்றும் 28 நாட்களுக்கு ஒரு செல்லுபடியைக் கொண்டுள்ளது. மேலும், பயனர்கள் ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1200 நிமிடங்கள் என்ற அழைப்பு வரம்புகளை கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.198/-க்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் திட்டம்.!

கூடுதலாக, நிறுவனம் இதே திட்டங்களை அதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.178/- மற்றும் ரூ.338/-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளியான அறிக்கையின்படி இந்த திட்டங்ககள் இமாச்சல பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய வட்டங்களில் செல்லுபடியாகும்.English summary
Idea Cellular Announces Rs. 198 Plan With 1GB Data and Unlimited Voice Calls for 28 Days. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot