நீங்கள் ஐடியா வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!
தற்சமயம் தெலுங்கான,தமிழ்நாடு, மும்பை, ஆந்திரப் பிரதேசம் தவிர்த்து மகாராஷ்ட்ரா, சட்டீஸ்கர் , கேரளா, கோவா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது வோல்ட்இ சேவைகளை துங்கியுள்ளது.
தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் இப்போது புதிய சலுகைகள் மட்டும் அசத்தலான திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இறுதிக்குள் வோல்ட், சேவைகளை வழங்குவதாக ஐடியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இப்போது மகாராஷ்ட்ரா, கேரளா, கோவா, குஜராத் தெலுங்கான, ஆந்திரப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் உள்ள ஐடியா ஊழியர்களுக்கு வோல்ட்இ சேவையை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்கது.

தற்சமயம் தெலுங்கான,தமிழ்நாடு, மும்பை, ஆந்திரப் பிரதேசம் தவிர்த்து மகாராஷ்ட்ரா, சட்டீஸ்கர் , கேரளா, கோவா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது வோல்ட்இ சேவைகளை துங்கியுள்ளது.

இலவச டேட்டா:
ஐடியா -வின் வோல்ட்இ தகுதி பெற்ற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி டேட்டா வரை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக முதல் முதலாக வோல்ட்இ அழைப்பை மேற்கொள்ளும் ஐடியா வாடிக்கையாளர்களின் கணக்கில்
48 மணி நேரத்தில் இலவச டேட்டா சேர்க்கப்பட்டுவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜி நெட்வொர்க்:
ஐடியா 4ஜி நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் உடனே 2ஜி/3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சிறந்த நெட்வொர்க் வழங்குவதை உறுதி செய்யும் வையில் சிங்கிள் ரேடியோ வாய்ஸ் கார் கன்டினியுட்டி தொழிழ்நுட்பம் மூலம் தானாக மற்ற நெட்வொர்க்க்கு மாற்றப்படுவர்.

சீன நிறுவனம்:
ஐடியா நிறுவனம் வழங்கும் இந்த வோல்ட்இ சேவையை பொதுவாக பல்வேறு சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆதரவு கொடுக்கும் வகையில் உள்ளது. அதன்பின்பு விரைவில் நோக்கியா 3, நோக்கியா 5 போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த வோல்ட்இ சேவை பயன்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.357/- ப்ரீபெய்ட் :
ஐடியா செல்லுலார் நிறுவனமானது ரூ.357/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்கும்.


ரூ.398/- ப்ரீபெய்ட்:
ஐடியா நிறுவனம் இப்போது ரூ.398/- ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது, அதாவது இந்த திட்டத்தில் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டது, அதன்பின்பு 70நாட்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது.


Click it and Unblock the Notifications