2026-ன் முதல் இடி.. ஸ்மார்ட்போன், லேப்டாப் விலைகள் உயரும்.. சரியாக எப்போது முதல் அதிகரிக்கும்? ஏன்?
2026 ஆம் ஆண்டில் புதிய ஸ்மார்ட்போன் (New Smartphone), புதிய பிசி (New PC) வாங்குவது அல்லது உருவாக்குவது அதிக செலவை ஏற்படுத்தலாம். ஐடிசி-யின் புதிய கணிப்புகள் ஆனது 2026 ஆம் ஆண்டு பிசி துறை முழுவதும் குறிப்பிடத்தக்க விலை உயர்வை காணக்கூடும் என்று கூறுகின்றன. இதற்கு மெமரி காம்போனென்ட்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை முக்கிய காரணமாக இருக்கும்.
இந்த பிரச்சினையின் மையப்புள்ளியை "மெமரி சூப்பர் சைக்கிள்" என்று கூறும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். டிரேம் (DRAM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டைனமிக் ரேண்டம் அக்சஸ் மெமரி (Dynamic Random Access Memory) மற்றும் தொடர்புடைய காம்போனென்ட்களுக்கான தேவை கூர்மையாக அதிகரித்து வருகிறது.

ஏஐ சேவையகங்கள், ஏஐ திறன் கொண்ட பிசிக்கள் மற்றும் விண்டோஸ் 10 உடன் இணைக்கப்பட்ட மேம்படுத்தல்கள் பிசி-களுக்கு கிடைக்கும் ஆதரவுகளை முட்டுச்சந்துக்கு தள்ளுகின்றன. இருப்பினும், விநியோகம் தொடர்ந்து ஒரு போராட்டமாக உள்ளது. ஐடிசி மேற்கோள் காட்டிய தொழில்துறை சமிக்ஞைகளின்படி, மெமரி விலைகள் ஏற்கனவே உயர்ந்து வருகின்றன.
இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. கிராபிக்ஸ் கார்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேமிங் பொருட்கள் கூட இந்த தொடர்ச்சியான மெமரி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெனோவா (Lenovo), டெல் (Dell), எச்பி (HP), ஏசர் (Acer) மற்றும் ஆசஸ் (ASUS) உள்ளிட்ட பல முக்கிய பிசி தயாரிப்பாளர்களும் கடுமையான சந்தை நிலைமைகள் குறித்து எச்சரித்துளதாக கூறப்படுகிறது.
சில சப்ளையர்கள் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து சுமார் 15 - 20% விலை உயர்விற்கு தயாராகி வருவதாகவும். இதற்காக நிறுவனங்கள் - திருத்தப்பட்ட விநியோக ஒப்பந்தங்களுடன் சேர்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐடிசி 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய பிசி ஏற்றுமதிகள் சுமார் 4.9% குறையும் என்றும் எதிர்பார்க்கிறது.
மெமரி பற்றாக்குறை மோசமடைந்தால் இந்த சரிவு இன்னும் "செங்குத்தாக" இருக்கலாம். பெரிய நிறுவனங்கள் நல்ல நிலையில் இருப்பதால், அவைகளால் இதை சமாளிக்க முடியும். இதற்கு மாறாக, கஸ்டம் பிசி பில்டர்கள் தனிப்பட்ட காம்போனென்ட்களுக்கு அதிக விலைகளுடன் தாக்கத்தை நேரடியாக உணர வாய்ப்புள்ளது.
இந்த நிலைமை ஏஐ பிசிக்கள் என்று அழைக்கப்படுபவற்றின் வெளியீட்டையும் பாதிக்கலாம். மைக்ரோசாப்டின் கோபைலட் பிளஸ்-க்கான தேவைகள் உட்பட பல ஏஐ அம்சங்கள் அதிக மெமரி கான்ஃபிகரேஷனை சார்ந்தது. விநியோகங்கள் இறுக்கமாக இருப்பதால், சில உற்பத்தியாளர்கள் மெமரி அளவையும் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 இல் ரீசார்ஜ் விலைகளும் உயரலாம்: ரிலையன்ஸ் ஜியோ (Jio), பாரதி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட 3 இந்திய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே 2026 ஆம் ஆண்டில் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை 20% உயர்த்த வாய்ப்பு உள்ளதாக மோர்கன் ஸ்டான்லியை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மோர்கன் ஸ்டான்லியின் இந்த அறிக்கை உண்மையாகும் பட்சத்தில்.. எடுத்துக்காட்டுக்கு, ரூ.349 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் ஆனது ரூ.70 வரை விலை உயர்வை காணலாம். இதன் மூலம் ரூ.349 ரீசார்ஜ் ஆனது ரூ.419 வரை விலை உயர்த்தப்படலாம்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட ரீசார்ஜ் கட்டண உயர்வுகள் ஆனது இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஆனது தத்தம் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த 2 வருட கால அவகாசம் எடுத்துகொள்வதை வெளிப்படுத்தி உள்ளன. நினைவூட்டும் வண்ணம் கடைசியாக அறிவிக்கப்பட்ட ரீசார்ஜ் விலை உயர்வு - ஜூலை 2024 இல் வந்தது. இந்த போக்கின்படி, அடுத்தது 2026 இல் வரக்கூடும்.


Click it and Unblock the Notifications








