Subscribe to Gizbot

புதிய சர்ச் என்ஜினை அறிமுகம் செய்யும் ஐசிஎம் ரெஜிஸ்ட்ரி!

Posted By: Staff
புதிய சர்ச் என்ஜினை அறிமுகம் செய்யும் ஐசிஎம் ரெஜிஸ்ட்ரி!

ஐசிஎம் ரெஜிஸ்ட்ரி நிறுவனம் சர்ச்.எக்ஸ்எக்ஸ்எக்ஸ் (search.xxx) என்ற புதிய சர்ச் என்ஜினை அறிமுகம் செய்கிறது இதை ஒரு என்டர்டெயின்மென்ட் டொமெயினாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. 'அந்த' மாதிரியான விஷயங்கள் பற்றிய தகவல்களை இந்த தேடுதளத்தில் பெற முடியும்.

ஆன்லைனில் நிறைய வலைத்தளங்கள் போர்ன் சம்மந்தமான விஷயங்களை வழங்குகிறது. ஆனால் சர்ச்.எக்ஸ்எக்ஸ்எக்ஸ் என்ற இந்த புதிய சர்ச் என்ஜின் மால்வேர் ஸ்கேன் தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய சர்ச் என்ஜினை இந்த ஆண்டில் அறிமுகம் செய்வதாக முன்னமே திட்டமிடப்பட்டிருந்ததாக ஐசிஎம் ரெஜிஸ்ட்ரியின் உயர் அதிகாரி வின்யார்டு தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த சர்ச் என்ஜின் 19 மொழிகளில் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot