Home
News

ஆகஸ்ட் 1 முதல்.. ஒவ்வொரு UPI-க்கும் ரூ.6-10 கட்டணம்.. யுபிஐ யூசர்களின் தலையில் இடியை இறக்கிய பிரபல வங்கி!

ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் யெஸ் வங்கியை (Yes Bank) தொடர்ந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கியும் (ICICI Bank) கூட, பிஏ-க்கள் (PAs) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் (Payment Aggregators) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை (UPI Transactions Charge) வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறியாதோர்களுக்கு, பேமண்ட் அக்ரிகேட்டர்கள் (கட்டண ஒருங்கிணைப்பாளர்கள்) என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு ஆன்லைன் கட்டண முறைகளை ஒரே தளத்தின் மூலம் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் சேவை வழங்குநர்கள் ஆவார்கள். இவர்கள் ஒரு இடைத்தரகராக செயல்பட்டு, பல பேமண்ட் கேட்வேஸ் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைத்து, கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் செயல்முறையை எளிதாக்குகிறார்கள்.

ரூ.6-10 கட்டணம்.. யுபிஐ யூசர்களின் தலையில் இடியை இறக்கிய பிரபல வங்கி!

அப்படியான பிஏ-க்களிடம், ஐசிஐசிஐ வங்கி ஆனது தனது வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் (Every UPI transaction) ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பரிவர்த்தனை கையாளுதல் கட்டணம் (Transaction handling fee) செலுத்த சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? ஐசிஐசிஐ வங்கியில் எஸ்க்ரோ அக்கவுண்ட்டை (Escrow account) பராமரிக்கும் பிஏக்களுக்கு, ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு பரிவர்த்தனைக்கு 2 அபேஸிஸ் பாயிண்ட்களை (Basis Points) வசூலிக்கும், இது அதிகபட்சமாக ரூ.6 இருக்கும். எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்காத பிஏக்களுக்கு, கட்டணம் 4 பேஸிஸ் பாயிண்ட்களாக இருக்கும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படலாம்.

இருப்பினும், ஒரு வணிகரின் ஐசிஐசிஐ வங்கி கணக்கில், பிஏக்கள் வழியாக நேரடியாக செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு மேற்கண்ட கட்டணங்கள் பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பிற வங்கிகள், கடந்த 8 முதல் 10 மாதங்களாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலித்து வருகின்றன.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான, எம்டிஆர் (MDR) ஆனது, அதாவது வணிக தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate) ஆனது பூஜ்ஜியமாகவே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டாலும், என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்டும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது வங்கிகளுக்கு ஒரு சுவிட்ச் கட்டணத்தை (Switch fee) வசூலிக்கிறது. இதனால் சில வங்கிகள் இந்த செலவை பிஏ-க்களுக்கு வழங்குகின்றன.

யுபிஐ தொடர்பாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ஒரே மாற்றம் இதுவல்ல. புதிய பேலன்ஸ் செக் லிமிட் மற்றும் புதிய ஆட்டோபே டைமிங்ஸ் என யுபிஐ சேவையின் கீழ் பல மாற்றங்கள், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

முதல் மற்றும் முக்கிய மாற்றம் யுபிஐ சேவையின் கீழ் அணுக கிடைக்கும் ஆட்டோபே வசதியில் (UPI Autopay Feature) அமல்படுத்தப்பட உள்ளது. யுபிஐ ஆட்டோபே என்பது பயனர்கள் தங்களுடைய யுபிஐ ஆப்களை பயன்படுத்தி - சந்தாக்கள், பில்கள் அல்லது லோன் இஎம்ஐ-க்கள் போன்ற தொடர்ச்சியான கட்டணங்களை ஆட்டோமெட்டிக் ஆக பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

ஆகஸ்ட் 1 முதல் ஆட்டோமெட்டிக் ஆக பணம் டெபிட் ஆவதற்கான நேரங்கள் (AutoPay Timings) ஒதுக்கப்படும். அதாவது யுபிஐ ஆப்களின் வழியிலான ஆட்டோபே பரிவர்த்தனைகள் ஆனது குறிப்பிட்ட 3 வகையான நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும்: காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு.

இதேபோல யுபிஐ ஆப் வழியாக பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் (Daily Balance Check Limit): ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே ஏஎன்றும், மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் (Linked Bank Account View Limit): ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே என்றும் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் பேமண்ட் ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு வரம்பு (Transaction Status Check Limit): குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளியுடன், நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் ஸ்டேட்டஸ்-ஐ 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இதேபோல பேமண்ட் ரிவர்சல் கேப் (Payment Reversal Cap): 30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகளை எழுப்பலாம், 1 அனுப்புநருக்கு 5 என்ற அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவைகள் எல்லாமே ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
ICICI Bank May Ask Payment Aggregators Transaction Handling Fee for Every UPI Transaction From Aug 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X