மொத்த கிராமமே புகழும் பிரபல ஐசிசி நடுவர்: இனி அதுக்காக மரம் ஏறவேண்டாம்!

|

பிரபல ஐசிசி நடுவரான அனில் சுவத்ரி கொரோனா ஊரடங்கால் தனது சொந்த கிராமத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கிராமத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை ஒன்றை அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஐ.சி.சி.யின் சர்வதேச குழு நடுவர்களில் ஒருவரான அனில் சவுத்ரி, தேசிய தலைநகரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டாங்க்ரோலுக்கு புறப்பட்டார். அங்கு மொபைல் போன் நெட்வொர்க்கைப் பெறுவதற்காக கிராமவாசிகள் மரங்களில் ஏறுவதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

நடுவர் அனில் சவுத்ரி அனுபவித்த சிக்கல்

நடுவர் அனில் சவுத்ரி அனுபவித்த சிக்கல்

நடுவர் அனில் சவுத்ரி சென்று தங்கியிருக்கும் கிராமத்தில் நெட்வொர்க் கிடைக்காத நிலை காரணமாக அவர் ஐசிசி தொடர்பான பல்வேறு கூட்டங்களும் ஆன்லைனில் நடக்கிறது, நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை அனில் சவுத்ரி ஏற்பட்டி இருக்கிறது.

மரத்தின் மீது ஏறினால்தான் நெட்வொர்க்

மரத்தின் மீது ஏறினால்தான் நெட்வொர்க்

அரை கிலோ மீட்டர் தூரம் கடந்து வயல்வெளியில் உள்ள மரத்தின் மீது ஏறினால்தான் நெட்வொர்க் கிடைக்கும் என்ற நிலை ஏற்படுகிறது என அனில் சவுத்ரி வருத்தம் தெரிவித்தார். இதையறிந்த நெட்வொர்க் நிறுவனம் அந்த கிராமத்தில் நெட்வொர்க் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு துவக்கம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு துவக்கம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்த கருத்து

நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்த கருத்து

இது குறித்து நடுவர் அனில் சவுத்ரி பிடிஐ-யிடம் தெரிவிக்கையில், கிராமவாசிகள் இப்போது தடையின்றி பேச முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், கல்விப் பணிகளுக்கு மொபைல் போன் அணுகல் தேவைப்படும் குழந்தைகளுக்கு இது நன்மையாக இருக்கும்.

கிராமமக்களுக்கான பெரிய விஷயம்

கிராமமக்களுக்கான பெரிய விஷயம்

மேலும் கூறிய அவர், கிராமவாசிகள் தங்கள் நன்றியைக் காட்ட வந்தபோது, ​​இது (மொபைல் கோபுரம் வைத்திருப்பது) அவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என பெருமையுடன் கூறினார். அதுமட்டுமின்றி கிராமமக்கள் பல்வேறு புகார்களை தன்னிடம் கூறுகிறார்கள், நான் வெறும் நடுவர் தான் என நகைச்சுவை உணர்வோடு அவர்களிடம் தெரிவித்தாக கூறினார்.

அனில் சவுத்ரி தங்களுடையை சூப்பர் ஹீரோ

அனில் சவுத்ரி தங்களுடையை சூப்பர் ஹீரோ

நெட்வொர்க் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் கிராமமக்கள் உற்சாகம் அடைந்துள்ளது. இனி தங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படிக்கலாம் எனவும் இணையம் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்ய முடியும் எனவும் கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உதவி செய்த நடுவர் அனில் சவுத்ரி தங்களுடையை சூப்பர் ஹீரோ என கிராம மக்கள் தெரிவித்தனர்.

source: hindustantimes.com

Best Mobiles in India

English summary
ICC umpire anil chaudhary resolves network issue in his village

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X