ஜியோ ஹாட்ஸ்டார் புதிய முடிவு.. போனில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஏன்?
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஸ்ட்ரீமிங் தளங்களில் முன்னணியில் இருப்பது ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) தான். குறிப்பாக மக்கள் இந்த தளத்தில் திரைப்படங்கள், தொடர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை விரும்பி பார்க்கின்றனர்.
அதிலும் கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்த ஜியோ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமானது என்றே கூறலாம். அதுவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை சுமார் 3 பில்லியன் (தோராயமாக ரூ.25,000கோடி) வாங்கி இருந்தது.

இதில் ஏற்கனவே நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2024, சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025, பெண்கள் உலகக் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026 ஆகிய முக்கிய போட்டிகள் அடங்கும். இந்நிலையில் நிதி இழப்புகள் காரணமாக ஜியோ ஹாட்ஸ்டார் ஆனது 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பியதில் ஏற்பட்ட கடுமையான நிதி இழப்பு காரணமாக (2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட இழப்பு) இந்த ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என ஜியோ ஹாட்ஸ்டார் ஐசிசியிடம் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியேறுவதாக அறிவித்தது ஐசிசி (ICC) மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் எடுத்துள்ள இந்த முடிவால் ஐசிசி தற்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது தொடர்பாகச் சோனி, நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களை ஐசிசி அணுகி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆனாலும் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர், வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. குறிப்பாக இதில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ள நிலையில் ஒளிபரப்பு உரிமத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் மூலம் போட்டிகளை நேரலையில் காண்பதில் தடங்கல் வருமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அதேபோல் வீட்டில் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள், அலுவலகங்களில் இருப்பவர்கள் இந்த ஜியோ ஹாட்ஸ்டார் செயலி வாயிலாகத் தான் கிரிக்கெட் போட்டியை நேரலையில் பார்த்து ஸ்கோர் விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள். கடந்த சில வருடங்களில் இந்த ஜியோ ஹாட்ஸ்டார் செயலி ஆனது அனைத்து மக்களின் போன்களில் தவறாமல் இடம்பெற்றிருந்தது.
ஆனால் ஜியோ ஹாட்ஸ்டாரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் போட்டிகளை போனில் கண்டு ரசிக்கும் பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஆனாலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் புதிய திரைப்படங்கள், தொடர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றை மக்கள் அதிகளவு விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








