Home
News

8 வருடங்களுக்கு பின்.. மினி உலக கோப்பை.. ICC Champions Trophy 2025.. LIVE ஆக.. FREE ஆக பார்ப்பது எப்படி?

8 வருட இடைவெளிக்கு பிறகு, ஒருவழியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் போட்டிகள் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகின்றன. கிரிக்கெட் ரசிகர்களால் மினி உலக கோப்பையாக பார்க்கப்படும் இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆனது மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கின்றன. இதன் கீழ் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆன்லைனில்.. லைவ் ஆக.. இலவசமாக பார்ப்பது எப்படி? என்பதை பற்றி நீங்கள் யோசிக்க தொடங்கினால்.. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 நேரடி ஸ்ட்ரீமிங் விவரங்கள் மற்றும் எந்தெந்த டிவி சேனல்களின் வழியாக இந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்கிற விவரங்கள் இதோ:

ICC Champions Trophy 2025.. LIVE ஆக.. FREE ஆக பார்ப்பது எப்படி?

மொபைல் வழியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 லைவ் ஸ்ட்ரீமை இலவசமாக பார்ப்பது எப்படி? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பார்ட்னர் ஜியோஸ்டார் தான் என்பதை ஐசிசி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆக புதிய ஜியோஹாட்ஸ்டார் ஆப் வழியாக அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கலாம்.

ஒருவேளை நீங்கள் மொபைல் வழியாக மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் அல்லது ஸ்மார்ட் டிவி வழியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ லைவ் ஸ்ட்ரீம் செய்ய விரும்பினால், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவிற்கு பதிலாக ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் அல்லது ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவிற்கு பணம் செலுத்தலாம்.

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். இதில் மொபைல் பிளான் தான் மிகவும் மலிவான திட்டமாகும். மேலும் இது 2 வகையான சந்தா விருப்பங்களுடன் வருகிறது.

முதலாவதாக 3 மாத கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான் உள்ளது. விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டம், ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டும், எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ.149 ஆகும்.

இரண்டாவதாக 1 ஆண்டு கால சந்தாவுடன் வரும் மொபைல் பிளான்: இதுவும் ரூ.149-ஐ போலவே விளம்பர ஆதரவுடன் வரும் இந்த திட்டமாகும். மேலும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைலில் மட்டுமே எச்டி ரெசல்யூஷனின் (720பி) கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் இது 1 ஆண்டு அல்லது 12 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இதுவும் விளம்பர ஆதரவுடன் வரும் திட்டம் தான். ஆனால் இது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் ஃபுல்எச்டி (1080பி) ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கிறது மற்றும் இது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. விலை மூன்று மாதங்களுக்கு - ரூ.299 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.899.

ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இது விளம்பரங்கள் இல்லாத திட்டமாகும். இது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான லாக்-இன்களை அனுமதிக்கும். மேலும் 4கே ரெசல்யூஷனில் கன்டென்ட்களை பார்க்க அனுமதிக்கும். ஆனால் விளையாட்டு மற்றும் பிற லைவ் நிகழ்வுகலில் சில விளம்பரங்கள் இருக்கும் என்று ஜியோஸ்டார் நிறுவனம் கூறுகிறது. விலை 1 மாதத்திற்கு ரூ.299, 3 மாதங்களுக்கு - ரூ.499 மற்றும் 12 மாதங்களுக்கு - ரூ.1499.

எந்தெந்த டிவி சேனல்களின் வழியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2
ஸ்போர்ட்ஸ் 18 1
ஸ்போர்ட்ஸ் 18 1 எச்டி
ஸ்போர்ட்ஸ் 18 2
ஸ்போர்ட்ஸ் 18 2 எச்டி

Best Mobiles in India

English summary
ICC Champions Trophy 2025 Live Streaming How to Watch Free on Mobile JioHotstar Smart TV Channel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X