IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!

|

உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டு, தற்பொழுது அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎம் தலைவராக அரவிந்த் கிருஷ்ணா தேர்வு

ஐபிஎம் தலைவராக அரவிந்த் கிருஷ்ணா தேர்வு

ஐபிஎம் நிறுவனத்தின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவிற்கான மூத்த தலைவராக அரவிந்த் கிருஷ்ணா பதவி வகித்து வந்தார். ஐபிஎம் நிறுவனத்திற்கு வருவதற்கு முன்பு அரவிந்த் கிருஷ்னா, கான்பூர் ஐஐடி-யில் இளங்கலை படித்து பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அர்பானா-சாம்பெனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முடித்தார்.

30 ஆண்டு பயணம்

30 ஆண்டு பயணம்

அரவிந்த கிருஷ்ணா, தனது பட்ட படிப்பை முடித்த பின் 1990ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் சேர்ந்துள்ளார். தற்பொழுது ஐபிஎம் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒன்று சேர்ந்து அரவிந்த் கிருஷ்ணாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.

Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!

இவரால் மட்டுமே முடியும் கிண்ணி ரொமெடி வாழ்த்து

இவரால் மட்டுமே முடியும் கிண்ணி ரொமெடி வாழ்த்து

ஐபிஎம் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இவரால் மட்டுமே முடியுமென்று அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிண்ணி ரொமெடி தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கிருஷ்ணா கூறியது

அரவிந்த் கிருஷ்ணா கூறியது

ஐபிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைவதாகவும், ஐபிஎம் நிறுவனம் தன்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குக் கடமைப்பட்டுள்ளேன் என்றும், உலக ஐபிஎம் ஊழியர்களுடன் இணைத்து பணிபுரிய ஆவலுடன் இருப்பதாகவும், புதிய ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணாவிற்குப் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளதைப் பாராட்டி டிவிட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவியத்துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
IBM's Legendary Ginni Rometty Replaced With Indian Origin Arvind Krishna As New CEO : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X