Home
News

15 ஆண்டாக சிக் லீவில் ஊழியர்! 13 கோடி கொடுத்த IBM நிறுவனம்! ஆனாலும் பத்தல எதற்காக தெரியுமா?

15 ஆண்டாக சிக் லீவில் இருந்த நபர் பிரபல IBM நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணத்தை, கேட்டால் நீங்களே ஆடிப்போய்விடுவீர்கள். 15 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உள்ள பல முன்னணி தொழில்நுப்ட நிறுவனங்களில் ஊழியர்களின் வேலைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, 15 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருக்கும் ஐடி ஊழியர் ஒருவர், சம்பள உயர்வு இல்லாததால் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

15 ஆண்டாக சிக் லீவில் ஊழியர்! 13 கோடி கொடுத்த IBM நிறுவனம்! ஆனா பத்தல!

பணவீக்கம் காரணமாக, இவருக்கு வழங்கப்பட தொகை காலப்போக்கில் பெரியளவில் சுருங்கிவிடும் என்று இயன் கிளிஃபோர்ட் கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையின் அறிக்கை படி, கிளிஃபோர்டின் என்ற ஊழியர் கடந்த 2000 ஆம் ஆண்டில் அவர் லோட்டஸ் டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர், இந்த நிறுவனத்தை பிரபல ஐபிஎம் நிறுவனம் வாங்கியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்ற இவர், கடந்த 5 ஆண்டுகளாக தனக்கு ஊதிய உயர்வோ, விடுமுறை ஊதியமோ கிடைக்கவில்லை எனக் கூறி 2013-ல் புகார் அளித்தார். ஐபிஎம், இந்த விஷயத்தைத் தீர்க்கும் முயற்சியில், அவரைத் தங்கள் ஊனமுற்றோர் திட்டத்தில் சேர்த்துள்ளது. இது அவருக்கு 65 வயது வரை ஆண்டுக்கு £54,028 என்ற தொகையை வழங்குவதாக கூறப்படுகிறது.

அதாவது இந்திய மதிப்பில் வருடத்திற்கு சுமார் ரூ. 55.34 லட்சம் ஆகும். நிறுவனம் அவருக்கு வழங்கிய சம்பளத்தில் இது 75 சதவீதத்தை உத்தரவாதம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை அவர், அவருடைய 65 வயதுக்கு ஓய்வு பெறும் வரை வாங்குவர் என்று கூறப்படுகிறது. IBM குறிப்பிட்ட ஊனமுற்றோர் திட்டம் இந்த வகையில் தான் செயல்படுகிறது. இதன் மூலம் அவருக்கு மொத்தமாக £1.5 மில்லியன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

15 ஆண்டாக சிக் லீவில் ஊழியர்! 13 கோடி கொடுத்த IBM நிறுவனம்! ஆனா பத்தல!

இந்திய மதிப்பின் படி, இவருக்கு தோராயமாக 13 கோடியே 45 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இருப்பினும், கிளிஃபோர்ட் இதை வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார். ஊனமுற்றோர் அல்லாத ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வைப் பெற்றுக் கொண்டு, தனக்கு சாதகமற்ற முறையில் நடத்தப்பட்டதாக அவர் நிறுவனம் மீது கடிந்துகொண்டார்.

பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியம் சரிசெய்யப்படாவிட்டால், அவரது சம்பளத்தின் மதிப்பு 'சுருங்கிவிடும்' என்ற கருத்தை கிளிஃபோர்ட் கூறி வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பால் ஹவுஸ்கோ விசாரித்தார். வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஊனமுற்றோர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி ஹவுஸ்கோ, ஊனமுற்ற நபர்களுக்கு அதன் பிரத்தியேகக் கிடைக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு, திட்டம் "இன்னும் தாராளமாக" இருக்கக்கூடாது என்பதில் பாரபட்சம் இல்லை என்று வலியுறுத்தினார். ஒரு வருடத்திற்கு 50,000 பவுண்டுகளுக்கு மேல் கணிசமான பலனையும் எடுத்துக்காட்டி, அதன் மதிப்பு 30 ஆண்டுகளில் பாதியாக குறைந்தாலும், அது குறிப்பிடத்தக்க தொகையாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இறுதியில், நீதிபதி இந்த வழக்கை விரைவாக தள்ளுபடி செய்தார். மற்றும் அவர் பெறும் இந்த தொகையானது மிகவும் கணிசமான பலன் தான் என்றும் நீதிபதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை, கீழே கமெண்ட் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
IBM IT worker on sick leave for 15 yrs gets paid Rs 55 lakh yearly but sues company for no salary hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X