லாலிபாப் அப்டேட் ஆக்டோ கோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.13,990க்கு வெளியானது

By Meganathan
|

ஐபெரி நிறுவனம் ஆக்சஸ் பீஸ்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.13,990க்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஸ்னாப்டீல் தளத்தில் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் கொண்ட ஐபெரி ஆக்சஸ் பீஸ்ட் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டிருப்பதோடு மேலும் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டோ கோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.13,990க்கு வெளியானது

ஆக்சஸ் பீஸ்ட் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகின்றதோடு 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் MT6592 பிராசஸர் 3ஜிபி ராம் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி, வைபை, ப்ளூடூத 4.0, GPS/ A-GPS மற்றும் எப்எம் ரேடியோ வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்த வரை 3050 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iberry on Monday launched the Auxus Beast smartphone in India at Rs. 13,990. The smartphone will go on sale exclusively via Snapdeal on April 20.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X