பட்ஜெட் விலையில் ஐபாலின் 2 புதிய மொபைல்கள்!

By Super
|
பட்ஜெட் விலையில் ஐபாலின் 2 புதிய மொபைல்கள்!

மின்னனு சாதனங்களை கொடுப்பதில் தனக்கு என்று ஒரு சிறப்பான இடத்தை பிடித்து இருக்கும் ஐபால் நிறுவனம் ஆவ்ரா-3 மற்றும் க்ளாம்-3 என்ற 2 புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆவ்ரா-3 மொபைல் 3 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொடுக்கும். ஐபால் நிறுவனத்தின் இன்னொரு மொபைலான க்ளாம்-3 மொபைல் 2.6 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இந்த 2 மொபைல்களுமே டிஎப்டி எல்சிடி திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். மேலும் இந்த கிளாம்-3 மொபைல் ஆல்ஃபா நியூமரிக் கீப்பேட் வசதியினை கொண்டது.

ஆவ்ரா-3 மொபைலில் 1,200 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினை பெறலாம். க்ளாம்-3 மொபைலில் உள்ள 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

இது போன்ற பல சிறப்பான தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த மொபைல்கள் கவர்ச்சிகரமான விலையையும் கொண்டது. ஐபால் ஆவ்ரா-3 மொபைலை ரூ.4,495 விலையையும், ஐபால் க்ளாம் மொபைல் ரூ.2,999 விலையையும் கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X