பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் "என் மகன் சொல்வது உண்மை"- ஆதாரம் இங்கே!

|

ஒரு சிறுவன், தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்ததாகவும், பூமியை அணுசக்தி பேரழிவில் இருந்து காப்பாற்ற அங்கிருந்து வந்ததாகவும் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். நடந்தது என்ன என்றும், MARS இல் இருந்து வந்ததாக குறிப்பிடும் சிறுவன் மற்றும் அவரது தாயார் கூறும் தகவலையும் விரிவாக பார்க்கலாம்.

பூமியை காப்பாற்ற வந்துள்ளேன்

பூமியை காப்பாற்ற வந்துள்ளேன்

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் போரிஸ் கிப்ரியானோவிச். இவரும் இவரது தாயாரும் கூறிய தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த தகவல்கள் தற்போது உலகளவில் பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது.

அந்த சிறுவன், தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளதாகவும் பூமியை காப்பாற்றவே வந்ததாகவும் கூறுகிறார். இந்த கருத்தை அவரது தாயாரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 வயது முதலே செய்தித்தாள்

1 வயது முதலே செய்தித்தாள்

இந்த தகவல் தி சன் என்ற தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அந்த சிறுவனின் தாயார் தன் மகன் குறித்து கூறுகையில், ஜனவரி 11, 1996 இல் தனது மகனை பெற்றெடுத்தேன். அப்போது தான் ஏதோ ஒரு அசாதாரணமான ஒன்றை உணர்ந்தேன். எனது பிரசவம் மிக வேகமாக நடந்தது, நான் வலியை சுத்தமாக உணரவில்லை. குழந்தை பிறந்த உடன் யாரையும் உற்று பார்க்காது. ஆனால் என் மகன் அவனது பெரிய பழுப்பு கண்களால் என்னை பார்த்தான் என கூறினார். இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் தனது மகன் ஒரு வயது முதலே செய்தித் தாள்களை வாசிக்கத் தொடங்கிவிட்டதாக சிறுவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

அசாதாரணமான மனநலத் திறன்கள்

அசாதாரணமான மனநலத் திறன்கள்

சிறுவனின் தாயார் தனது மகன் குறித்து கூறிய பல தகவல்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கிறது. பிறந்து நான்கு மாதம் முதலே, எளிமையான வார்த்தைகளை பேசக்கூடியவராக இருந்ததாகவும், எட்டு மாதத்தில் எளிமையான வாக்கியங்கள் அனைத்தும் பேசும் திறன் கொண்டவராக இருந்ததாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார். போரிஸுக்கு அசாதாரணமான மனநலத் திறன்கள் இருந்ததை அறிய முடிந்தாக அவர் கூறி இருக்கிறார்.

என் மகன் தெய்வீகக் குழந்தை

என் மகன் தெய்வீகக் குழந்தை

அசாதாராணமான திறன்களை கண்டு ஆரம்பத்தில் கவலைப்பட்டதாகவும், பின் காலப்போக்கில் தங்கள் மகன் ஒரு சாதாரண குழந்தை அல்ல என்று புரிந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மகன் அசாதாரண மூளைக் கொண்ட தெய்வீகக் குழந்தை என்று சிறுவனின் தாயார் குறிப்பிட்டார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பது உறுதி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பது உறுதி

குறிப்பாக வானப் பொருட்களில் ஆர்வமாக இருப்பதாகவும், விசித்திரமான வானியல் நிகழ்வுகள் குறித்து அந்த சிறுவன் பேசுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் செவ்வாய் கிரக அமைப்புகள், பிற கிரக நாகரிகங்கள் மற்றும் அறியப்படாத பூமிக்கு அப்பாற்பட்ட பொருள் குறித்தும் விரிவான அறிவை இந்த சிறுவன் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. அணுசக்தி போரில் செவ்வாய் கிரகம் தாக்குதல் அடைந்ததாகவும் இதன்காரணமாக அங்குள்ள மக்கள் நிலத்திற்கு அடியில் வசித்து வருவதாகவும் இந்த சிறுவன் கூறியதாக கூறப்படுகிறது.

பூமியை விட மேம்பட்ட நாகரீகம்

பூமியை விட மேம்பட்ட நாகரீகம்

போரீஸ் இரண்டு வயதாக இருந்தபோதே அற்புதமான மொழித் திறமையைக் கொண்டிருந்ததாகவும், மூன்று வயது முதலே பிரபஞ்சத்தின் ஆற்றல் குறித்து பேசத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிறுவன் செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கை முறை குறித்து கூறியதாகவும் அந்த நாகரீகம் மிகவும் மேம்பட்டது என்று குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள்

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள்

போரிஸ் கூற்றுப்படி, விண்வெளியில் இருந்து பூமியில் வந்த ஒரே குழந்தை அவர்மட்டும் அல்ல, மனித குலத்தை காப்பாற்றும் பணிக்காக நமது கிரகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் இருந்து பலர் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மனித குலம் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கு என பூமிக்கு அனுப்பப்பட்ட "இண்டிகோ குழந்தைகள்" என்று அழைக்கப்படும் பலரில் தானும் ஒருவர் என போரிஸ் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்டிருக்கின்றனராம்.

பலமுறை பூமிக்கு வந்து திரும்பி இருக்கிறேன்

பலமுறை பூமிக்கு வந்து திரும்பி இருக்கிறேன்

அவ்வளவுதானா என்றால் அதுதான் இல்லை இன்னும் பல தகவல்கள் இருக்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் பூமிக்கு வருவது இது முதல்முறை அல்ல என்றும் பல சந்தர்ப்பங்களில் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். லெமூரியன் காலத்தில் இருந்து பலமுறை பூமிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்கலம் வடிவமைத்த சிறுவன்

விண்கலம் வடிவமைத்த சிறுவன்

போரிஸ், விண்கலம் ஒன்றை வடிவமைத்து ஸ்பேஸ்கிராஃப்ட் எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார். தான் வடிவமைத்த விண்கலம் குறித்து சிறுவன் விவரித்துள்ளார். இது 25 சதவீத திட உலோகத்தால் செய்யப்பட்ட வெளிப்புற அடுக்குகளையும் இரண்டாவதாக ரப்பர் அடுக்குகளையும் மூன்றாவது உலோக அடுக்குகளை கொண்டு உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக நான்கு சதவீத சிறப்பு காந்த அடுக்குகளை பொருத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த காந்த அடுக்கை பயன்படுத்தி இயந்திரங்கள் பிரபஞ்சத்தில் எங்கும் பறக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

image Credit: YOUTUBE/PROJECT CAMELOT

Best Mobiles in India

English summary
I'M FROM MARS TO PROTECT EARTH ! "My Son Says It's True"- Super Natural Power Russian Kid Claims!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X