Home
News

குறித்த நேரத்தில் ஏலியன்ஸ் வருவாங்க "ஆதாரம் இந்தாங்க"- வாழும் இடமும் இதுதான்.. உடைந்த உண்மை!

சைமன் லூயிஸ் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர், Aliens விண்வெளியில் வாழ்வதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்கள் வாழும் இடம் குறித்த தகவலையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அப்பல்லோ பயணம்

அப்பல்லோ பயணம்

1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 16 பயணத்தின் போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படத்தை மேற்கோள் காட்டி அதில் உள்ள ஒரு நீளமான பள்ளத்தை இவர் சுட்டிக் காட்டுகிறார். அப்பல்லோ 15 பயணத்தின் போது ஒரு பறக்கும் தட்டு, அப்பல்லோ 11 போது லூனார் லேண்டருடன் நெருங்கிய சந்திப்பில் வந்த ஒரு பளபளப்பான யுஎஃப்ஓ என பலவகைகளை இவர் மேற்கோள்காட்டுகிறார்.

ஏலியன்ஸ் இருப்பதற்கான ஆதாரம்

ஏலியன்ஸ் இருப்பதற்கான ஆதாரம்

59 வயது எழுத்தாளரான சைமன் லூயிஸ், யுஎஃப்ஓக்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் குறித்த உண்மையை நாசா மறைப்பதாக நம்புகிறார். 30 ஆண்டுகளாக இதுகுறித்த தகவலை சேகரித்து நிறையத் தகவல்கள் யுஎஃப்ஓக்கள் குறித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கையில் இருக்கும் ஆவணங்கள்

கையில் இருக்கும் ஆவணங்கள்

1994 ஆம் ஆண்டு, முன்னாள் நாசா ஊழியர் ஒருவரை நேரில் சந்தித்ததன் மூலம் இதுகுறித்த தனது ஆர்வம் தூண்டப்பட்டதாகவும் அப்போது அப்பல்லோ பயணங்களின் போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் அவர் தனக்கு கொடுத்ததாகவும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்னை படிப்பகத்திற்கு அழைத்து சென்றார் எனவும் அங்கு இந்த ஆவணங்களை அவர் என்னிடம் கொடுத்தார் நான் அதிர்ச்சியடைந்தேன் எனவும் எழுத்தாளர் சைமன் தெரிவித்துள்ளார்.

ஏலியன்ஸ்கள் நிலவில் தான் வாழ்கிறார்கள்

ஏலியன்ஸ்கள் நிலவில் தான் வாழ்கிறார்கள்

இதுகுறித்து சைமன் லூயிஸ் விரிவாக கூறுகையில், என்னுடைய ஆதாரம் ஒரு மேக்கப் கேரக்டர் என்று மக்கள் எளிதாகச் சொல்லலாம் ஆனால் இது அவர் நாசாவில் பணிபுரிந்த போது சேகரித்தது.

யுஎஃப்ஓக்கள் குறித்த நிறைய ஆதாரங்கள் இந்த புகைப்படங்களில் இருக்கிறது. ஏலியன்ஸ்கள் நிலவில் தான் வாழ்கிறார்கள் என்பதை குறிப்பிடும் வகையில் இவரது ஆதாரங்கள் இருக்கிறது. இயற்கை தோட்டக்கலை வணிகத்தின் இயக்குனரான சைமன், தனது வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் குறித்து இரண்டு புத்தங்களையும் எழுதியுள்ளார்.

ஏலியன்ஸ் இருக்கிறதா?

ஏலியன்ஸ் இருக்கிறதா?

தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் எத்தனையோ கட்டங்கள் முன்னேறி இருக்கிறது, முன்னேறி வருகிறது. ஆனால் இந்த காலத்திலும் பதில் கண்டறிய முடியாத பல கேள்விகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சொன்னால், "கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா" என்ற கேள்விக்கு பதில் கிடையாது. ஆனால் கோழியும் உள்ளது, முட்டையும் உள்ளது. அதேபோல் தான் இந்த விஷயமும் ஏலியன்ஸ்கள் இருக்கிறது என ஆதாரங்கள் ஆங்காங்கே வெளியானாலும் எதுவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டவை கிடையாது.

வேற்றுகிரக வாசியை சந்தித்தால் என்ன செய்வது?

வேற்றுகிரக வாசியை சந்தித்தால் என்ன செய்வது?

ஏலியன்ஸ் குறித்த ஆராய்ச்சிகள் ஆங்காங்கே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் எலியட் இதுகுறித்து கூறுகையில், மனித குலகத்தின் மீதான தாக்கம் குறித்து சிந்திப்பதையும் தாண்டிச் செல்ல வேண்டிய நேரம் இது, ஒரு வேற்றுகிரகவாசியை சந்திக்கிறோம் என்றால் அத்தகைய சூழ்நிலையில் நாம் எவ்வாறு உரையாடுவோம் என்பதை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

மொழியின் கட்டமைப்பாகக் கருதப்படும் பூமி

மொழியின் கட்டமைப்பாகக் கருதப்படும் பூமி

மேலும்,மொழியின் கட்டமைப்பாகக் கருதப்படும் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் வரும் சிக்னல்களை ஸ்கேன் செய்வது மற்றும் அதன் அர்த்தத்தை அறிவது ஒரு விரிவான செயல்முறையாகும் எனஜான் எலியட் தெரிவித்தார். இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வேற்றுகிரக வாசிகள் தாக்குதல்

வேற்றுகிரக வாசிகள் தாக்குதல்

ஒவ்வொரு வருடம் தொடங்கும் முன்பும் பாபா வங்காவின் கருத்துக் கணிப்புகள் உலக அளவில் பிரபலமாவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற பாபா வாங்கா கணிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று வேற்று கிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் லட்சக் கணக்கானவர்கள் பலியாக நேரிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
I have Evidence of Aliens Life and I Know the Alien Living Place: British Author Says
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X