என் சர்வீஸ்ல உங்களைப்போல எத்தனை பேர் பாத்துருக்கேன்.!!

"நான் பல வியாபார தோல்விகளை எதிர்கொண்டுள்ளேன், ஆனால் ஒருபோதும் பின் வாங்கியதில்லை" - முகேஷ் அம்பானி.!

|

தூரதேசத்தில் இருந்து பார்க்கும் போது எல்லா நட்சத்திரங்களுமே துகள்கள் போன்று தான் காட்சியளிக்கும். நெருங்கிப்பார்த்தால் தான் தெரியும் யார் தான் நிஜமான துகள்கள், யார் நிஜமான பேருருவம் கொண்டவர் என்பது - அப்படியான ஒரு நிலைபாட்டுக்குள் நிற்கும் பல இந்திய பிரபலங்களுள் ஒருவர் தான் - முகேஷ் அம்பானி.!

<strong>மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!</strong>மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!

அதற்கான மாபெரும் நிரூபணம் எது என்பதை, நான் கூறி நீங்கள் அறிய வேண்டிய அவசியத்தையெல்லாம் தாண்டிய பிரபலத்தன்மை கொண்டது - ரிலையன்ஸ் ஜியோ. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சகாப்தம் தொடங்கிய நாள் முதல் இந்த மணித்துளி வரை சரிக்கு சமமான புரட்சிகள் மற்றும் வெற்றிகள் அதே சமயம் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையெல்லாம் "அசால்ட்" ஆக எதிர்கொள்ளும் அம்பானியின் மனஉறுதி தான் என்ன.? அவரின் வெற்றிப்பாதைக்கான அடித்தளம் எது.? இதோ அவரே உதித்த வார்த்தைகள் உங்களுக்காக.!

இரண்டு விடயங்கள்

இரண்டு விடயங்கள்

"முதலில் உங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை உங்களின் சொந்த பணத்தை விட அதிக கவனத்தோடு கையாளுங்கள். இரண்டாவதாக, ஒரு சரியான அணி இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியாது. இந்த இரண்டுமே எனக்கு பேச்சுவார்த்தைக்கு உட்படாத விடயங்கள் ஆகும்" என்கிறார் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் உரிமையாளரான முகேஷ் அம்பானி.!

சூத்திரங்கள்

சூத்திரங்கள்

ஒரு தொழிலதிபராக தனது அனுபவத்தை விளக்கும் போது அவர் ஒரு வெற்றிகரமான நிறுவன தலைவராக நிலைக்க வைக்க உதவிய சூத்திரங்களாக தன் தந்தை (மறைந்த திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர்) கூறிய பாடங்களை அம்பானி நினைவு கூர்ந்தார்.

தந்தை மூலம்

தந்தை மூலம்

"நான் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, தொழில் முனைவோர் பற்றிய முதல் விடயமானது என் தந்தை மூலம் எனக்கு கற்றுத்தரப்பட்டது. நான் என் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் என்னென்ன மற்றும் என் வேலை என்ன என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீ ஒரு வேலை செய்ய போகிறாய் என்றால் நீ ஒரு மேலாளராக தான் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்"

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

இதன் மூலம் "ஒரு தொழில் முனைவோர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்" என்று அவரது தந்தை கூறிய அறிவுரைகளில் இருந்து கற்றுக்கொண்டதை தெரிவிக்கிறார்.

என்னென்ன பிரச்சினைகள்

என்னென்ன பிரச்சினைகள்

மேலும் ஒரு தொழில் முனைவோர் ஆனவர் அவருக்கு மிகவும் பிடித்த வேளையில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கும், இருக்கிறது என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும் என்பதாதை "இது பிரச்சினைகளை தீர்ப்பது பற்றிய விடயமல்ல, மாறாக இது பிரச்சினைகளை கண்டுபிடிப்பது பற்றியது. நீங்கள் பிரச்சனை கண்டறிய முடிந்தால் தான் அதை தீர்க்க முடியும்" என்கிறார்.!

சமுதாயம் மற்றும் பிறருக்கு நன்மை

சமுதாயம் மற்றும் பிறருக்கு நன்மை

தவிர, ஒரு சிக்கலை தீர்ப்பது என்பது முதலில் நிச்சயமாக சில வழிகளிலாவது சமுதாயம் மற்றும் பிறருக்கு நன்மைகளை விளைவிக்க வேண்டும், இரண்டாவதாகத்தான் நிதி வருமானமாக இருக்க வேண்டும். இப்போது நாம் ரிலையன்ஸ் ஜியோவை நிலைநாட்டியதில் இருந்து மூன்றாவதாக நான் கற்றுக்கொண்ட விடயம் என்னெவென்றால் இதன் மூலம் சமுதாய மதிப்பை உருவாக்க வேண்டும் என்பது தான்" என்று கூறியுள்ளார் அம்பானி.

எதிர்மறை உணர்வு

எதிர்மறை உணர்வு

வணிக ரீதியிலான ஒரு சரியான அணி அமைப்பது எப்படி என்று பேசும் போது உங்கள் சொந்த பார்வையின் வழியிலான பேரார்வம் கொண்ட அணியை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இறுதியாக, அணியினர் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும். தன்னை ஏகப்பட்ட நம்பிக்கை இல்லாத மனிதர்கள் இருப்பினும் கூட அவர் ஒரு நன்னம்பிக்கைவாதியாக இருக்க வேண்டும் எதிர்மறை உணர்வுகளை பரப்ப வேண்டும்" என்கிறார்.

"விட்டு கொடுக்காதீர்கள்"

அனைத்திற்கும் மேலாக அம்பானி இன்றும் ஒரு தொழிலதிபர் ஜொலிக்கிறார் என்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது அவர் பலமுறை பல தோல்விகளை தனிப்பட்ட மற்றும் வியாபார ரீதியாக சந்தித்துள்ளார் இருப்பினும் அவர் கூறுவது என்னவென்றால் "தோல்விகள் மூலம் எப்போதும் மனம் உடைந்து போகாதீர்கள். தோல்விகளிடைம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் விட்டு கொடுக்காதீர்கள்" என்கிறார் எதையும் "ஹாயாக", "அசால்ட்" ஆக எதிர்கொள்ளும் முகேஷ் அம்பானி.

அம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி  ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.!

அம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, நேற்று (ஏப்ரல் 19, வியாழன் அன்று) அவரின் 61-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் தரவரிசைப்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது "பாசம்" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. அன்றிலிருந்து இன்று வரையிலாக அம்பானி பற்றிய தசெய்திகளை, கவல்களை மற்றும் விவரங்களை தேடித்தேடி படிக்கின்றோம் அல்லவா.?

அப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியை பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு புட்டுப்புட்டு வைக்கப்போகிறோம்.

01. வியாபாரத்திற்கு கிரிக்கெட்; மனதிற்கு.?

01. வியாபாரத்திற்கு கிரிக்கெட்; மனதிற்கு.?

ஐபில் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அம்பானியின் பள்ளி நாட்களில் அவருக்கு பிடித்த விளையாட்டு எதுவென்று தெரியுமா.? - அது நமது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தானாம். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹாக்கி மீதான அதீத ஆர்வத்தினால் தான் அம்பானி தனது படிப்பை கோட்டை விட்டாராம்.!

02. அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் யாரென்று கூறினால் நம்புவீர்களா.?

02. அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் யாரென்று கூறினால் நம்புவீர்களா.?

"வியாபாரம் என்பது ஒரு யுத்தம், அதில் வியாபாரிகள் தான் போராளிகள்" என்பது தான் தற்கால சந்தைகளின் நிலைப்பாடு. ஆனால் அதெல்லாம் வளர்ந்த பின்னர் தான், பள்ளி பருவத்தில் இல்லை என்பதற்கு அம்பானியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தற்கால வணிகத் தொழிலதிபர்கள் ஆன ஆதி கோத்ரேஜ் மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர்கள் முகேஷ் அம்பானியின் பள்ளி தோழர்கள் ஆவார்கள், அவர்கள் அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸூம் கூடவாம்.!

03. அம்பானி செய்து பார்க்காத ஒரு காரியம்.!

03. அம்பானி செய்து பார்க்காத ஒரு காரியம்.!

முகேஷ் அம்பானி ஒரு டீடோட்டலர் ஆவார். அம்பானி அவரின் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவைத்தது இல்லையாம். மேலும் அவர் ஒரு சுத்தமான சைவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட் ஏ மேன்.?!

04. சத்தமின்றி சாதிக்கும் திறன்.!

04. சத்தமின்றி சாதிக்கும் திறன்.!

முகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.

05. ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!

05. ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!

உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தகாரமும் நம்ம அம்பானி தான். தெற்கு மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

06. மோடிக்கு சமம்.!

06. மோடிக்கு சமம்.!

ஹாக்கியை நேசித்தது போலவே முகேஷ் அம்பானி, கார்களின் மீதும் காதல் கொண்டிருக்கிறார். இதுநாள் வரையிலாக, மொத்தம் 168 கார்களை அவர் சொந்தமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கார்களில் புல்லட் ப்ரூப் மற்றும் குண்டு வெடிப்பை தாக்குப்பிடிக்க கூடிய BMW 760LI காரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை காரை தான் பிரதமர் நரேந்திர மோடியும் பயன்படுத்துகிறார். மேலும் அம்பானியிடம் மெர்சிடஸ்-மேபேக் பென்ஸ் எஸ்660 கார்ட், ஆஸ்டன் மார்டின் ராபைட், ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய கார்களையும் கொண்டுள்ளார்.

இது அம்பானியால் மட்டுமே முடியும்.!

இது அம்பானியால் மட்டுமே முடியும்.!

"எங்க லோக்கல் எம்எல்ஏ-வே ரெண்டு கார் வச்சி இருக்காரு.! அம்பானி கார் வைத்து இருப்பதெல்லாம் ஒரு மேட்டரா.?" என்று நீங்கள் கேட்டால் - கரெக்ட் தான்.! முகேஷ் அம்பானி ஒரு படி மேல் சென்று பால்கான் 900 என்கிற தனி விமானம் ஒன்றையும் கொண்டுள்ளார், அதில் ஒரே நேரத்தில் வெறும் 14 பயணிகள் மட்டுமே பறக்க முடியும். பால்கான் 900 விமானத்தின் இன்றைய மதிப்பு சுமார் 43.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது தவிர, முகேஷ் அம்பானி ஒரு ஏ -319 விமானமும் உள்ளது. இது 180 பயணிகளை சுமந்து பயணிக்கும் திறனை கொண்ட ஒரு விமானமாகும். இதன் மதிப்பு 230 கோடி ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிக ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த தனியார் ஜெட் ஆன, போயிங் பிசினஸ் ஜெட் 2 ஒன்றையும் அம்பானி கொண்டுள்ளார். இதன் மதிப்பு சுமார் 73 மில்லியன் டாலர்கள் ஆகும்.

 இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்.!

இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்.!

இந்தியாவிற்கு முகேஷ் அம்பானி எவ்வளவு முக்கியமே என்பதை நீங்கள் அறிவீர்களா.? இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களில் Z- வகை பாதுகாப்புடன் உலா வரும் ஒரே தொழில் அதிபர் முகேஷ் அம்பானிதான்.

வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கொண்டே நாம் பார்த்த வேலை.!

வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கொண்டே நாம் பார்த்த வேலை.!

அம்பானி தலைமையின் கீழ் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய டெலிகாம் துறையில் மாபெரும் கட்டண புரட்சியை ஏற்படுத்தியது என்பதற்கு நீங்களும் நாங்களும் தான் சாட்சி. அறிமுகம் ஆன அடுத்த 30 நாட்களால் சத்தமில்லமால் ஒரு விஷயம் நடந்தது அது என்னவென்று தெரியுமா.? இது ஏமாற்று வேலை.? அம்பானியை நம்ப வேண்டாம் என்று சந்தேகப்பட்டுக் கொண்டே பெரும்பாலான இந்தியர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைக்குள் நுழைந்தனர். அதாவது அறிமுகமான ஒரே மாதத்திற்குள் 16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஜியோ அடைந்தது.

சம்பளமும், அம்பானியின் பெரிய மனசும்.!

சம்பளமும், அம்பானியின் பெரிய மனசும்.!

முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமான ரூ.15 கோடி ஆகும். உடனே வாயை பிளக்க வேண்டாம். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5% பங்களிப்பு ஆட்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி அம்பானி நிறுவனத்தின் மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
I faced multiple business failures but never gave up: Mukesh Ambani. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X