கண்கலங்க வைத்த பெண்: ஒரே ட்விட்டில் 12 பேரில் இருந்து 32.8K ஃபாலோவர்கள்- அப்படி என்ன ட்விட் தெரியுமா

|

புற்றுநோய் என்றால் தீராநோய் என்ற காலம் கழிந்து அந்த நோயில் இருந்து கடந்து வந்தவர்கள் பலர் உள்ளனர். புற்றுநோய் வந்தாலே உயிர் பிரிந்து விடும் என்ற காலம் கடந்து அதில் இருந்து மீண்டவர்களும் உள்ளனர், வீழ்ந்தவர்களும் உள்ளனர். புற்றுநோயை முறையான சிகிச்சையாலும், மன தைரியாத்தாலும் எதிர்கொண்டு சாதித்தவர் பலர் உள்ளனர். இதில் நடிகை கவுதமி 14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்து போராடி மீண்டு வந்ததாகவும் கூறினார்.

புற்றுநோய் தீரா வியாதி அல்ல

புற்றுநோய் தீரா வியாதி அல்ல

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கோ, எவருக்கோ வந்து கொண்டிருந்த புற்றுநோய் இப்போது ஜலதோஷம் பிடிப்பதுபோல் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைமைக்கு முன்னேறியுள்ளது. புற்றுநோய் என்பது தீரா வியாதி என்று முழுமையாக கூறிவிட முடியாது.

புற்றுநோயில் இருந்து மீண்ட பிரபலங்கள்

புற்றுநோயில் இருந்து மீண்ட பிரபலங்கள்

இந்தியாவில் புற்றுநோயை வென்றவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (நுரையீரல் புற்றுநோய்) அனைவருக்கும் தெரிந்தவர். அவர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்ததோடு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க தொடங்கினார். அதுமட்டுமின்றி, நடிகைகள் கவுதமி, மனீஷா கொய்ராலா என பலரும் போராடி வெற்றி பெற்று மீண்டு வந்துள்ளனர்.

கேட்டி ஹெலண்ட் என்ற அந்த பெண்

கேட்டி ஹெலண்ட் என்ற அந்த பெண்

அதன்படி புற்றுநோயை எதிர்த்து போராடி வரும் ஒரு பெண்ணின் ட்விட்டர் பதிவு ஒரே நாளில் வைரலாகியுள்ளது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கேட்டி ஹெலண்ட் என்ற அந்த பெண் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக chemotherapy நிறைவு பகுதிக்கு வந்துள்ளது.

போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!

Chemotherapy சிகிச்சை

Chemotherapy சிகிச்சை

தனது சிகிச்சை குறித்து வீடியோ காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நான் அடிக்கடி ட்வீட் செய்வதில்லை. என்னை 12 பேர் பின் தொடர்கிறார்கள். இன்று எனக்கு கடைசி Chemotherapy சிகிச்சை. இதை எல்லாரிடமும் சொல்ல வேண்டும்(ஆனால் குறைந்தது என்னை பின் தொடரும் 12 பேருக்காவது) என குறிப்பிட்டுள்ளார்.

90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்வு

90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்வு

கேட்டி ஹெலண்ட் 12 பேருக்கு பதிவிட்ட இந்த ட்விட், மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது. 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். இதை எதிர்பார்க்காத கேட்டி தனது மகிழ்ச்சியில வெளிகாட்ட முடியாத அளவு திகைத்து போனார்.

நாசா இயக்கிய அப்பல்லோ: நிலவில் மனிதன் தடம் பதித்ததன் விளைவு மற்றும் மாற்றங்கள் என்ன தெரியுமா?நாசா இயக்கிய அப்பல்லோ: நிலவில் மனிதன் தடம் பதித்ததன் விளைவு மற்றும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

32.8k நபராக அதிகரிப்பு

32.8k நபராக அதிகரிப்பு

இந்த ட்விட் குறித்த செய்தியை பிபிசி செய்தியாக பதிவிட்டுள்ளது. அதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சேர் செய்துள்ளார். இந்த உலகமே தன்னை கட்டி அனைத்து அன்பு செலுத்தியது போல் உணர்வதாக நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் கேட்டி. பதிவிடுவதற்கு முன்பு 12 ஃபாலோவர்கள் பதிவிக்கு பின் தற்போது 32.8k நபரை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
I don’t tweet often: how girl get 12 followers to 32.8k in single tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X