தரமான கண்டுபிடிப்பு, கண்டிப்பாக உதவும்: அசத்திய ஹூண்டாய் நிறுவனம்.!

வாகனம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களை இணைத்து தான் இந்த அசத்தலான கார் உருவாக்கப்பட்டுள்ளது.

|

இப்போது வரும் அனைத்து தொழில்நுட்பங்களும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது, என்று தான் கூறவேண்டும், அதன்படி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தரமான கண்டுபிடிப்பு, கண்டிப்பாக உதவும்: அசத்திய ஹூண்டாய்  நிறுவனம்.!

ஆண்டுதோறும் நடக்கும் இந்த மின்னணு பொருட்கள் கண்காட்சியில் நூதன பொருட்கள் மற்றும் நவீன ரக சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் எலிவேட் என்ற நான்கு கொண்ட காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

4கால்கள்

4கால்கள்

இந்த புதிய வகை காரில் டயர்களுக்கு பதிலாக 4கால்கள் பொருத்தப்பட்டுள்ளன, இந்த வாதனத்தை நிலச்சரிவு,நிலநடுக்கத்தால் ஏற்படும் பேரழிவு, அழிப்பேரலையால் உண்டாக்கும் தொடர் வினைகள் போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிமோட் கன்ட்ரோல்

ரிமோட் கன்ட்ரோல்

பின்பு கடுமையான இடிபாடுகளுக்கு நடுவிலும் லாவமாக செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

குறிப்பாக அவசர காலங்களில் மீட்பு பணியில் மட்டுமல்லாது, ஆம்புலன்ஸ் போன்றும் இந்த வாகனத்தை பயன்படுத்தமுடியும்
என ஹூண்டாய் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 மிகப் பெரிய புரட்சியே ஏற்படும்

மிகப் பெரிய புரட்சியே ஏற்படும்

வாகனம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களை இணைத்து தான் இந்த அசத்தலான கார் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த கார் சாலைகளில் செல்லும்போது, வாகனப் போக்குவரத்தில் மிகப் பெரிய புரட்சியே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியோடு மோதும் என்ற பீதியை கிளப்பிய டெஸ்லா கார் இப்போ எங்க இருக்கு.?

பூமியோடு மோதும் என்ற பீதியை கிளப்பிய டெஸ்லா கார் இப்போ எங்க இருக்கு.?

விண்வெளி பயணத்தில், மிக கடினமான மற்றும் முரண்பாடான ஒரு சிக்கல் இருக்கிறது. அது வேறொன்றுமில்லை விண்வெளிக்குள் நாம் எதையாவது செலுத்தும் போது, அது எங்கே போகிறது, எங்கே போகவேண்டும் என்பதை மிக மிக துல்லியமாக கணிக்கவே முடியாது.

தாயம் விழ வேண்டும் என்று கண்மூடித்தனமான உருட்டபடும் பகடையை போன்றது தான் இந்த விண்வெளி விளையாட்டு. முன்னும் பின்னும் சில குறைகள் இருந்தாலும், அதை சாதூர்யமாக சரிபடுத்திக் கொள்வது எப்படி என்பதில் தான் அடங்கி இருக்கிறது இந்த விளையாட்டின் வெற்றி.!

ஆகச்சிறந்த சமீபத்திய எடுத்துக்காட்டு.!

ஆகச்சிறந்த சமீபத்திய எடுத்துக்காட்டு.!

என்னதான் "இன்ச் பை இன்ச்" ஆக திட்டம் போட்டாலும், கால் போன போக்கிலே மனம் போவது போன்று தான், விண்வெளிக்குள் பயணிக்கும் பொருட்களும் போகும் என்பது வெளிப்படை. அதற்கு ஆகச்சிறந்த சமீபத்திய எடுத்துக்காட்டு தான் விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் -சிவப்பு நிற டெஸ்லா கார்.!

நம்மால் ஏன் கணிக்க முடியவில்லை.?

நம்மால் ஏன் கணிக்க முடியவில்லை.?

கிராவிட்டி எனப்படும் புவியீர்ப்பை நாம் தெளிந்திருக்கும் பட்சத்தில், விண்வெளிக்குள் புகும் பொருளை நம்மால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையும் எளிமையாக புரிந்துகொள்ள முடியும். பலமான உந்து சக்தியின் துணைகொண்டு விண்வெளிக்குள் செலுத்தப்படும் ஒரு விண்கலம் ஆனது வாயிட் (Void) எனப்படும் வெற்றிடத்திற்குள் நுழைகிறது. அது எதிர்காலத்தில் எந்த புள்ளியை சந்திக்க வேண்டும் என்பதை, குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் (சிக்கல்கள்) தான் முடிவு செய்கினறன. அந்த இரண்டுமே நமது கைகளில் இல்லை, இயற்கையிடம் தான் உள்ளது. அவைகள் என்ன.?

சிக்கல் நம்பர் ஒன்று.!

சிக்கல் நம்பர் ஒன்று.!

முதல் விஷயம் - இதர கிரகங்கள். விண்வெளியில் பூமி மட்டுமே இல்லை, பூமியை போன்றே புவியீர்ப்பு சக்தி கொண்ட வேறு கிரகங்களும் உள்ளன. அவைகளால் ஒரு விண்கலத்தின் பயண பாதையில் குறுக்கிட முடியும். அந்த குறுக்கீடானது, திட்டமிடப்பட்ட பயண பாதையை மிக எளிமையாக மாற்றி அமைக்கவும் முடியும். இந்த இடத்தில், ஒரு விண்கல ஏவல் சார்ந்து நிகழ்த்தப்பட்ட ஆயிரமாயிரம் பகுப்பாய்வுகள் மற்றும் கணிதங்கள் காணாமல் போகும்.

சிக்கல் நம்பர் இரண்டு.!

சிக்கல் நம்பர் இரண்டு.!

இரண்டாவது விஷயமானது, முதல் விஷயத்தின் விளைவாக ஏற்படும் ஒரு தொடர் நிகழ்வாகும். இதர கிரகங்களின் புவியீர்ப்பு தாக்கத்தினால், விண்கலத்தின் நிலை மற்றும் வேலாசிட்டியில் (வேகம்) மாற்றங்கள் ஏற்படும். அது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, எதிர்காலத்தில் இது எங்கு செல்லும் என்பதை பற்றி அறிந்துகொள்வதை கடினமாக்குகிறது.

டெஸ்லா கார் ஆனது திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.!

டெஸ்லா கார் ஆனது திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.!

நடந்து முடியும் வரை இனிஷியல் பொசிஷன் (Initial Position) எனப்படும் ஆரம்ப நிலையை கணிக்கவே முடியாது. அப்படியாக கணிக்க முடியாத அந்த இனிஷியல் பொஷிஷன் தான், குறிப்பிட்ட விண்கலத்தின் எதிர்காலத்தையே நிர்ணயம் செய்கிறது. இது போன்ற பல காரணங்களால் தான், விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட டெஸ்லா கார் ஆனது திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.

சூரியனை நோக்கி இறங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.!

சூரியனை நோக்கி இறங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.!

இனிஷியல் பொசிஷன் உட்பட பல சிக்கல்களை சந்தித்த சிவப்பு நிற டெஸ்லா கார் ஆனது, அதன் ஆரம்ப நிலை மற்றும் திசைவேகத்தில் சில மாற்றங்களை கண்டது. அவைகள் மிகச் சிறிய வித்தியாசங்கள் தான் என்றாலும் கூட, அது கணிக்க முடியாத ஒரு நிலைப்பாட்டை அடைந்தது. டெஸ்லா காரின் பிரதான பாதையானது இன்னும் பூமி மற்றும் செவ்வாய் கோளப்பாதையில் தான் இருக்கிறது என்றாலும் கூட, அது சூரியனை நோக்கி இறங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பூமியோடு மோதுமா.?

பூமியோடு மோதுமா.?

எனவே, அடுத்த நூறு ஆண்டுகள் கழித்து டெஸ்லாவின் சிவப்பு நிற கார் - ரோட்ட்ஸ்டர் - ஆனது எங்கு இருக்கும் என்பது பற்றி யாருக்குமே தெரியாது. ஆனால் புள்ளியியல் (Statistics) ரீதியாக அது இன்னும் ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை நோக்கி தான் பயணிக்கிறது. மறுகையில் அந்த கார், விண்மீன்களுக்கு இடையேவும் நுழையலாம் அல்லது ஆவியாகி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அல்லது அடுத்த 15 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி அல்லது வீனஸ் அல்லது சூரியனுடனான ஒரு மோதலையும் நிகழ்த்தலாம். எதிலுமே துல்லியமான கணிப்பு கிடையாது.

ஒரு எலிக்குஞ்சுயாக மாறும்.!

ஒரு எலிக்குஞ்சுயாக மாறும்.!

உடனே "அய்யயோ.. டெஸ்லா கார் பூமியோடு மோதுமா.?" என்று பதற வேண்டாம். அளக்க முடியாத அண்டத்தில் இருந்து எது வேண்டுமானாலும் பூமியோடு மோதலாம் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், எலான் மஸ்க் அனுப்பிய டெஸ்லா கார் ஆனது ஒரு எலிக்குஞ்சுயாக மாறும்.!

Best Mobiles in India

English summary
Hyundai’s ‘walking car’ concept highlight of CES 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X