இது ஹூண்டாய் பாஸ்- 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி: பார்க்க அப்படி இருக்கு- விலை என்ன தெரியுமா?

|

ஹூண்டாய் இன்று இந்தியாவில் ஸ்மார்ட் எல்இடி டிவியை அறிமுகம் செய்தது. முன்னணி சில்லறை விற்பனை தளங்களில் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் எலெக்ட்ரானிக்ஸ் தனது புதிய 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 3 மாடல்கள் ஸ்மார்ட் டிவியானது ரூ.59,000, 50 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ரூ.79,000 என்ற விலையிலும், அதேபோல் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியானது ரூ.99,000 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் முன்னணி கடைகளிலும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கின்றன.

ஹூண்டாய் ஸ்மார்ட் எல்இடி டிவி

ஹூண்டாய் ஸ்மார்ட் எல்இடி டிவி

ஹூண்டாய் ஸ்மார்ட் எல்இடி டிவி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ThinQ AI வாய்ஸ் அங்கீகாரம் மற்றும் மேஜிக் ரிமோட் மூலம் வெப் ஓஎஸ் டிவி மூலம் இயக்கப்படுகின்றன. ஏஆர்எம் CA55 1.1 GHz குவாட் கோர் செயலியின் ஆதரவுடன் இருக்கிறது. இது 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகளை விட நான்கு மடங்கு அதிக வேகமான இயக்கம் கொண்டது.

1.5 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு

1.5 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு

புதிய வரம்பில் 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு, இரட்டை பேண்ட் வைஃபை போன்ற அம்சங்களோடு இது வருகிறது. ஏஎல்எல்எம் (ஆட்டோ லோ லேடென்சி பயன்முறை), எம்இஎம்சி மோஷன் மதிப்பீடு, மிராகேஸ்ட் மற்றும் 2 வே ப்ளூடூத் வசதியோடு இந்த ஸ்மார்ட்டிவி இருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு வேகமான வலை தேடல், துல்லியமான செயல்திறன் உள்ளிட்டவைகளோடு வருகிறது. வெப் ஓஎஸ் டிவி ஸ்மார்ட் இன்டெர்ஃபேஸ் போன்ற பயன்பாடுகள் உடன் பொழுதுபோக்கை உறுதி செய்கிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5 உள்ளிட்ட பல அணுகல் ஆதரவு இருக்கிறது.

4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி

4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி

இதில் கிடைக்கும் பரந்த அளவிலான விளையாட்டுகள் மூலம் விளையாட்டாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை பெற அனுமதிக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகள் 20 வாட்ஸ் சரவுண்ட் சவுண்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ சவுண்ட் தொழில்நுட்ப அனுபவத்துடன் வருகிறது.

வெப் ஓஎஸ் உடன் 4கே அல்ட்ரா எச்டி டிவி

வெப் ஓஎஸ் உடன் 4கே அல்ட்ரா எச்டி டிவி

வெப் ஓஎஸ் உடன் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகளை அறிமுகம் செய்த ஹூண்டாஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஓஓ அபிஷேக் மல்பனி., இதுகுறித்த பேசினார். வெப் ஓஎஸ் டிவியை மிகவும் மேம்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி இயக்க முறைமையை வழங்குகிறது. ஏஐ தொழில்நுட்பம் மற்றும் எல்ஜி-ல் இருந்து ஒருங்கிணைந்த உள்ளடக்க சேவைகளுடன் கட்டப்பட்ட 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவிகள் வெப் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகின்றன. இது இந்திய பார்வையாளர்களுக்கு மாற்றுவித அனுபவத்தை கொடுக்கும்.

மூன்று அளவுகளில் ஸ்மார்ட் டிவி

மூன்று அளவுகளில் ஸ்மார்ட் டிவி

அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சாதனங்கள் டால்பி ஆடியோ, ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தன. புதிய 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. பின்பு அமேசான், Mi.com, Mi Home ஸ்டோர்களில் விற்பனைக்குவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும்

ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும்

புதிய 32-இன்ச், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் பேட்ச்வால் 4-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வருகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

பல்வேறு சிறப்பு அம்சங்கள்

பல்வேறு சிறப்பு அம்சங்கள்

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் க்ரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பிரத்யேக கூகிள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் க்யூக் மியூட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய Mi ரிமோட் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் அடங்கும். இது ஐந்து வினாடிகளுக்குள் டிவியை இயக்க உதவும் என்று கூறப்படுகிறது.

நேர்த்தியான அனுபவம்

நேர்த்தியான அனுபவம்

புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களில் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0 ஆகியவை அடங்கும். மேலும் லேட்டஸ்ட் மிரர்காஸ்ட் ஆப், ஆட்டோ லோ லேடென்சி மோட் போன்ற அம்சங்களும் இந்த சாதனங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Hyundai Electronics Launched 4K Ultra HD Smart LED TV with Three Different Sizes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X