Home
News

புதிய உச்சத்தை தொட்ட ஹைபர்லூப் வேகம்! மணிக்கு 288மைல்கள்...

கல்லூரி மாணவர்கள் வயதுடைய பொறியாளர்கள் குழு ஒன்று, எலன் மஸ்க்-ன் ஹைபர்லூப் ஃபாட்-களின் உச்சபட்ச வேகத்தை முறியடித்து, பரிசோதனையில் மணிக்கு 288 மைல் என்ற உச்ச வேகத்தை பதிவுசெய்து சாதனைபடைத்துள்ளனர்.

புதிய உச்சத்தை தொட்ட ஹைபர்லூப் வேகம்! மணிக்கு 288மைல்கள்...

எலன் மஸ்கிற்கு சொந்தமான தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் நடத்தப்பட்ட போட்டியின் ஒரு பகுதியாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. மேலும் இந்த அணி தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய வேகமானது அந்த அணியின்

சமீபத்திய வேகமானது அந்த அணியின்

முந்தைய சோதனை ஓட்ட வேகத்தை 4மைல்/மணி என்ற வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியது. சோதனை ஓட்டங்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் கலிபோர்னியா தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஒரு மைல் நீளமுள்ள சோதனை தளத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

லித்தியம் பாலிமர்ஸ்

லித்தியம் பாலிமர்ஸ்

மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த இக்குழுவானது, இந்த ஆண்டின் ஃபாட்-ல் எடையை குறைப்பதற்காக லித்தியம் பாலிமர்ஸ்-ல் இருந்து தயாரிக்கப்பட்ட புதிய பேட்டரிகள் உட்பட பல்வேறு புதிய மேம்படுத்துதல்களை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் ஒவ்வொரு பிரேக்கையும் தனித்தனியாக இயக்கும் வகையில் மேம்பட்ட பிரேக்கிங் அமைப்பும் உள்ளது.

மேலாளர் டோனி ஜுகிக்

மேலாளர் டோனி ஜுகிக்

"இந்த ஃபாட் நான்கு ஆண்டு பரிணாமத்தின் விளைவு என்பதால் இதுகுறித்து கண்டிப்பாக பேசவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கற்றுக்கொண்டோம் மற்றும் அதன் முடிவுகளை நடைமுறைப்படுத்தினோம். உலக சாதனையை உடைக்கவில்லை என்றாலும், நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியை அடைந்ததை இன்னும் நம்பமுடியவில்லை. நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்" என்கிறார் இக்குழுவின் மேலாளர் டோனி ஜுகிக்.

 பரிசோதனை குழாய்

பரிசோதனை குழாய்

ஒரு சிறிய விபத்து இருந்தபோதிலும் இப்போட்டியில் முதல் பரிசு இந்த அணிக்கே வெளிப்படையாக வழங்கப்பட்டது. ஃபாட்-ன் ஒரு பகுதி தன்னிச்சையாக கழன்றதன் காரணமாக சோதனை ஓட்டத்தின் போது பரிசோதனை குழாய் வழியாக அது செல்லும் போது கீழே விழுந்தது. பாப்ஸ்லெட் அளவிலான இந்த ஃபாட் பெரும்பாலும் அப்படியே தப்பித்தது.

வெறும் 30 நிமிடத்தில் பயணிக்கமுடியும்

வெறும் 30 நிமிடத்தில் பயணிக்கமுடியும்

ஹைப்பர்லூப் என்பது தொலைதூர இடங்களுக்கு இடையில் சுமார் 700mph வேகத்தில் மக்கள் போக்குவரத்து செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட முறை ஆகும்.


சீலிப்பட்ட ஃபாட்-ஐ வெற்றிடத்திற்கு இணையான குறைந்த அழுத்த குழாயில் செலுத்துவதன் மூலம் இது செயல்படுகிறது.


இந்த யோசனையானது 2013 ல் எலன் மஸ்க்-ஆல் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் லாஸ்ஏஞ்சஸ்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வரை உள்ள 380மைல் (610km) தொலைவை வெறும் 30 நிமிடத்தில் பயணிக்கமுடியும் என தெரிவித்தார்.

கடினமானதாக அமையும்

கடினமானதாக அமையும்

இந்த போட்டியை தொடர்ந்து வெளியான ஒரு ஆச்சரியமான அறிவிப்பில், மஸ்க் அடுத்த ஆண்டு போட்டியில் மேலும் உயர் வேக போக்குவரத்து எல்லைகளை அடையும் வகையில் அணிகளுக்கு கடினமானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

2020 கோடை காலத்தில் அடுத்த போட்டி

2020 கோடை காலத்தில் அடுத்த போட்டி

அடுத்த ஆண்டு போட்டியில் தற்போதுள்ள ஒரு மைல் சோதனை குழாய் ஆறு மைல்-ஆக நீட்டிக்கவும், தற்போதைய நேரான பாதையில் ஒரு வளைவு சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ளார். 2020 கோடை காலத்தில் அடுத்த போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Hyperloop-hits-new-speed-Prototype-pod-reaches-288-mph-Elon-Musks-competition : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X