Home
News

நீண்ட நேரம் போன் பயன்படுத்தி வந்த இளம்பெண்: பறிபோன பார்வை.! மருத்துவர் கொடுத்த அட்வைஸ் இதுதான்.!

தற்போது பல செல்போன் நிறுவனங்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக விவோ, ஒப்போ, ஒன்பிளஸ், சாமசங் நிறுவனங்களின் போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியதன் காரணமாகக் கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டிருக்கிறார். பின்புஇதுகுறித்து மருத்துவர் எழுதியுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்போது இதுகுறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

நீண்ட நேரம் போன் பயன்படுத்தி வந்த இளம்பெண்: பறிபோன பார்வை.!

டாக்டர். சுதிர் குமார்

அதாவது ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர். சுதிர் குமார். குறிப்பாக இவரிடத்தில் சமீபத்தில் மஞ்சு என்ற இளம் பெண்மணி சிகிச்சைக்காக வந்திருக்கிறார்.

குறிப்பாக மஞ்சு தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதற்காக வேலையை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இவர் பல மணி நேரம் தொடர்ந்து ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அதேபோல் இரவு நேரத்தில் வெளிச்சம் அதிகம் இல்லாத அறையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருடைய பார்வை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நேரம் போன் பயன்படுத்தி வந்த இளம்பெண்: பறிபோன பார்வை.!

ஆலோசனை

பின்பு சில நேரங்களில் இவருக்கும் பார்வைக் குறைவும் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சில வினாடிகளுக்கு எதையுமே பார்க்க முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளார் மஞ்சு. இதைத் தொடர்ந்து உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மஞ்சுவுக்கு மருந்துகளை வழங்குவதற்குப் பதிலாக ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார்.

அதாவது மஞ்சுவுக்கு ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடு ஏற்பட்டதை டாக்டர் சுதிர் கண்டறிந்திருக்கிறார். பின்பு இதைத் தொடர்ந்து மஞ்சுவிடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்குமாறும் பரிந்துரைத்துள்ளார் டாக்டர் சுதிர். குறிப்பாக மஞ்சு முதலில் தனது மூளை நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதோ என்று அஞ்சினார். ஆனால் டாக்டர் சொன்ன பிறகு என்ன பிரச்சனை என்பதை உணர்ந்து கொண்டார் மஞ்சு.

நீண்ட நேரம் போன் பயன்படுத்தி வந்த இளம்பெண்: பறிபோன பார்வை.!

பிரச்சனை நீங்கிவிட்டது

அதன்பின்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையே நிறுத்திக் கொள்கிறேன் என்று மருத்துவரிடம் கூறியுள்ளார் மஞ்சு. இப்போது ஒரு மாதம் ஆகிவிட்டது. மஞ்சு முற்றிலும் நன்றாக இருக்கிறார். பின்பு 18 மாதங்காளாக இருந்த அவரது பார்வை குறைபாடு பிரச்சனை நீங்கிவிட்டது என்றும், கண் பார்வை நார்மலாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் மஞ்சு.

மருத்துவர் கொடுத்த அட்வைஸ்

அதேபோல் மக்கள் டிஜிட்டல் சாதனங்களின் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கடுமையான பார்வை இழப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. பின்பு டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தும் போது 20-20-20 விதியை பின்பற்றுங்கள். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் 20 வினாடி பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

நீண்ட நேரம் போன் பயன்படுத்தி வந்த இளம்பெண்: பறிபோன பார்வை.!

இன்றைய நவீன காலத்தில் பல வேலைகளைச் செய்வதற்கு இந்த டிஜிட்டல் சாதனங்கள் மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன. ஆனாலும் இவற்றை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அதிக நேரம் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Hyderabad woman loses her eyesight after using her phone for too long: this is the doctor's advice: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X