ஐதராபாத்தில் சர்வதேச தகவல் தொழில் நுட்ப மாநாடு!

Posted By: Karthikeyan
ஐதராபாத்தில் சர்வதேச தகவல் தொழில் நுட்ப மாநாடு!

சர்வதேச தகவல் தொழில் நுட்பக் மாநாடு வரும் ஜூன் 21ந் தேதி முதல் 2 நாட்களுக்கு ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

அட்வான்டேஜ் எபி 2012 என்று அழைக்கப்படும் மாநாட்டில் ஆந்திர பிரதேச அரசால் நடத்தப்பட இருக்கிறது. மேலும் ஆந்திரவில் உள்ள ஐடி மற்றும் ஐடிஇஎஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் (ஐடிஎஸ்எபி) மற்றும் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இன்டியா (எஸ்டிபிஐ) என்ற அமைப்பும் இணைந்து இந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாட்டை இணைந்து நடத்த இருக்கின்றன.

இந்த மாநாடு ஐதராபாத் இன்டர் நேஷனல் கன்வென்சனல் சென்டரில் நடைபெற இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கின்றனர். குறிப்பாக ஐடி துறையில் இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot