நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசாக அளித்த கணவர்: திருமண நாளில் பூரித்து போன மனைவி!

|

நிலவின் அழகை குறிப்பிட்டு பல கவிதைகளும், பாடல்களும் வெளிவந்த வண்ணம் இருக்கும். இதில் தர்மேந்திர அனிஜா தம்பதியினரின் திருமண தினத்தை முன்னிட்டு தர்மேந்திர அனிஜா தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.

மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்க முடிவு

மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்க முடிவு

தர்மேந்திர அனிஜா, அஜ்மீரின் சப்னா தம்பதியினரின் எட்டாம் ஆண்டு திருமண நாளுக்கு தர்மேந்திர அனிஜா தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

நண்பர்களின் பரிந்துரை

நண்பர்களின் பரிந்துரை

தனது மனைவிக்கு ஏதாவது நல்ல அன்பளிப்பு வழங்க வேண்டும் என தனது நண்பர்களிடம் விசாரித்தேன். இகார்கள், நகைகள், வைரங்கள் போன்ற பொருட்களை பரிந்துரைத்தனர். ஆனால் அது திருப்திபடும் விதமாக இல்லை. வேறு எதாவது வித்தியாசமான பரிசு வழங்க வேண்டும் என முடிவு செய்ததாக கூறினார்.

நிலவில் மூன்று ஏக்கர் நிலம்

நிலவில் மூன்று ஏக்கர் நிலம்

இதையடுத்து பூமிக்கு அப்பாற்றப்பட்ட பரிசை வழங்க வேண்டும் என முடிவு செய்து நிலத்தில் மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கினேன் என கூறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Luna society international என்ற நிறுவனம் மூலம் தர்மேந்திரா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். மேலும் இதை வாங்கும் செயல்முறை முடிவடைய ஒரு வருடம் ஆகும் என கூறப்படுகிறது.

உலகிற்கு அப்பாற்பட்ட பரிசு

உலகிற்கு அப்பாற்பட்ட பரிசு

மேலும் இதுகுறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் நிலாவில் நிலம் வாங்கிய முதல் மனிதர் தான் என நினைப்பதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனவும் இந்த உலகிற்கு அப்பாற்பட்ட பரிசு தனக்கு கிடைத்துள்ளதாகவும் தர்மேந்திரா மனைவி அஜ்மீரின் சப்னா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பழனி, சபரிமலை, திருப்பதி சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?- இதோ வழிமுறைகள்!

நிலவில் இருப்பதை போல் உணர்கிறோம்

நிலவில் இருப்பதை போல் உணர்கிறோம்

மேலும் தர்மந்திரா மனைவி அஜ்மீரின் சப்னா கூறுகையில், நாங்கள் உண்மையில் நிலவில் இருப்பதைப் போல உணர்ந்தோம். திருமண நாளின்போது, ​​அவர் சொத்து ஆவணத்தின் கட்டமைக்கப்பட்ட சான்றிதழை தனக்கு பரிசாக அளித்தார் என கூறி மகிழ்ச்சியடைந்தார்.

நிலவில் நிலம் வாங்கலாமா

நிலவில் நிலம் வாங்கலாமா

நிலவில் உள்ள நிலப்பரப்பை 15 முக்கிய தளங்களாகப் பிரித்து 'The Lunar Registry' போன்ற தளங்கள் விற்பனை செய்து வருகின்றன. நிலவில் இடம் வாங்குவது சாத்தியமா, ஒருவர் தனது மனைவிக்கு நிலவில் இடம் வாங்கி அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றால் நாமும் இதை செய்யலாமா என கேள்விகள் வரலாம். இதற்கான பதில்களை பார்க்கலாம்.

வெளி விண்வெளி ஒப்பந்தம்

வெளி விண்வெளி ஒப்பந்தம்

நிலவு நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாதென்று கூறி, 1967 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய மூன்று பெரிய நாடுகள் ஒன்று சேர்ந்து 'வெளி விண்வெளி ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தைக் கொண்டு வந்ததது.

சர்வதேச ஒப்பந்தத்தின் விளக்கம்

சர்வதேச ஒப்பந்தத்தின் விளக்கம்

இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்து உலக நாடுகளும் இந்த சட்டத்தைப் பின்பற்றப்பட வேண்டும் என்பது கட்டாயம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 109 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஒப்பந்தம் அடிப்படையின் கீழ் கூறப்படுவது என்னவென்றால், அனைத்து வகையான விண்வெளி ஆய்வுகளும் (சந்திர ஆய்வுகளை உள்ளடக்கியது) அனைத்தும் மனிதக்குலத்தின் நலனுக்காக இருக்கும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

சந்திரனில் நிலம் வாங்கவோ விற்கவோ முடியாது

சந்திரனில் நிலம் வாங்கவோ விற்கவோ முடியாது

எந்தவொரு தனிநபரும் சந்திர நிலத்தை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது, அதைத் தனது என்று சொந்தமாக அழைக்கவும் முடியாது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கூட, The Lunar Registry போன்ற ஏஜென்சிகள் இன்னும் நிலவு நிலங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Husband who bought Land on the Moon as a Wedding Gift for his Wife

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X