பிப்.24 உடன் முடியும் BSNL-ன் பலே ஆபர்.. 1 ரீசார்ஜில் 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. எந்த திட்டம்?
லாங் வேலிடிட்டி, அதாவது ஒரே ஒரு ரீசார்ஜில் நீண்ட நாட்களுக்கு வேலிடிட்டியை தேடும் வாடிக்கையாளர்களை குறி வைத்து பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்த பாரத் கனெக்ட் 26 பிளான் ஆனது, நாளைய தினத்திற்கு பிறகு, அதாவது 2026 பிப்.24 ஆம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆக அறிமுகம் செய்யப்பட்ட பாரத் கனெக்ட் 26 பிளான் ஆனது பிப்ரவரி 24, 2026 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் தளம் வழியாக அறிவித்துள்ளது. அறிமுகம் செய்யப்படும் போதே - இது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், இந்த திடீர் நிறுத்தத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஒருவேளை இன்னமும் நீங்கள் பாரத் கனெக்ட் 26 பிளானை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், இதை ரீசார்ஜ் செய்யும் ஆர்வம் இருந்தால்.. உங்களுக்கு 1 நாள் மட்டுமே கெடு உள்ளது. பாரத் கனெக்ட் 26 பிளானின் விலை ரூ.2626 ஆகும். முன்னரே இந்த திட்டம் ஒரே ஒரு ரீசார்ஜில் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
மாதாந்திர ரீசார்ஜ்களில் சிக்கி சோர்வடைந்த பயனர்களுக்கு, இதுவொரு "கவர்ச்சிகரமான" ஆப்ஷன் என்பதில் சந்தேகமே வேண்டாம். ரூ.2626-ஐ ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்களுடைய பிஎஸ்என்எல் மொபைல் நம்பரை ஒரு முழு வருடத்திற்கும் ஆக்டிவ் ஆக வைத்திருக்க முடியும். இந்த திட்டத்தின் தினசரி செலவு தோராயமாக ரூ.7.19 மட்டுமே ஆகும்.
ரூ.2626 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 2.6ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். அதாவது முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தம் 949ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். டெய்லி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்தவுடன், இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். டேட்டாவுடன் சேர்த்து, இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கூட அணுக கிடைக்கும்.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், செல்ப் கேர் ஆப் அல்லது வாடிக்கையாளர் ஆதரவு சேனல்கள் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். பாரத் கனெக்ட் 26 பிளான் திரும்ப பெறப்பட்டாலும் கூட இந்நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் இன்னமும் சில பெஸ்ட் 365 டேஸ் பிளான்கள் இருக்கும்.
அதில் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் - கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. டெய்லி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்தம் (1 ஆண்டு முழுக்க) 912ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி செலவு சுமார் ரூ.6.57 ஆகும்.
பிஎஸ்என்எல்-ன் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்றொரு 1 ஆண்டு திட்டம் ரூ.2799 ஆகும். இது ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.7.66 என்கிற செலவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. டெய்லி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்தம் (1 ஆண்டு முழுக்க) 1095ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
பல ப்ரீபெய்ட் பயனர்களுக்கு, நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் மன அமைதியையும், பட்ஜெட் வசதியையும் வழங்குகின்றன. 2026 பிப்ரவரி 24 காலக்கெடு நெருங்கி வருவதால், "மீண்டும் மீண்டும்" ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு இல்லாமல் கணிசமான வருடாந்திர டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் பாரத் கனெக்ட் 26 பிளானை ரீசார்ஜ் செய்யலாம். அல்லது பொறுமையாக யோசித்து மற்ற 1 ஆண்டு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை கூட ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications