1800 பெண்களை ஆபாச வீடியோ எடுத்த மருத்துவமனை.! உண்மை காரணம் இதுதான்.!
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1800 பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ள மருத்துவமனையின் ரகசியம் தற்பொழுது அம்பலம் ஆகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1800 பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ள மருத்துவமனையின் ரகசியம் தற்பொழுது அம்பலம் ஆகியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டிக்கோ நகரத்தைச் சேர்ந்த "ஷார்ப் கிராஸ்மொன்ட்" என்ற தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தனியார் மருத்துவமனை
குழந்தை பிறப்பு, கருத்தடை, கருத்தரிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட பிரிவுகளுக்கென்று சிறந்து விளங்கும் இந்த தனியார் மருத்துவமனையில், இந்த மருத்துவமனையில் பல லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1800 பெண்களை ஆபாச படம்பிடித்துள்ள மருத்துவமனை
புகழ்பெற்ற இந்த மருத்துவமனை பற்றி தற்பொழுது வெளியாகியுள்ள இந்த அதிர்ச்சி தகவல் அனைவரையும் உறைய வைத்துள்ளது. மருத்துவமனையில் உள்ள ரகசிய கேமராகள் மூலம் சுமார் 1800 பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

81 வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு
அதுமட்டுமின்றி பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை செய்யும் நேரத்தில், ஆபாசமாகப் படம்பிடித்துள்ளதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுவரை இந்த மருத்துவமனையின் மீது 81 வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவறுதலான நோக்கத்தில் விடீயோக்கள் பதிவு செய்யப்படவில்லை
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மாறிவிடக் கூடாது என்பதற்காகவும், சரியான மருந்துகள் கொடுக்கப்பட்டதா என்று அறிவதற்கு வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வேறு எந்த ஒரு தவறுதலான நோக்கத்தில் விடீயோக்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications