Home
News

வீட்டுக்குள் வந்த முதல் மனித வடிவ ரோபோட்.. மனிதர்கள் பதட்டமடைய தேவையில்லை.. இது பர்சனல் பாடிகார்டு Robot-ஆ?

உலகத்தின் முதல் ஹுமனோய்டு ரோபோட் சேவை தற்போது முதல் முறையாக வீட்டு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மனித வடிவ ரோபோட்டை 1X என்ற நிறுவனம் வடிவமைத்து உருக்கையுள்ளது. பைபெடல் ஹுமனோய்டு ரோபோட்டாக (bipedal humanoid robot) உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்டிற்கு நிறுவனம் நியோ பீட்டா (Neo Beta) என்று பெயரிட்டுள்ளது. மனித வாழ்க்கைக்குள் ரோபோட்கள் மற்றும் ஏஐ-க்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ துவங்கியுள்ளன. முதலில் பெரிய-பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஊடுருவ துவங்கிய ரோபோட்கள் இப்போது நமது வீடுகளுக்குள்ளும் வர துவங்கிவிட்டது.

1X நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய மனித வடிவ நியோ பீட்டா ரோபோட் (Neo beta robot) ஆனது, பிரத்தியேகமாக வீடுகளில் மனிதர்களுடன் இணைந்து பணிபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளை இது செய்வதுடன், ஒரு பாதுகாவலனாகவும் பர்சனல் பாடிகார்டாகவும் செயல்படும் என்று 1X நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை பார்த்து யாரும் பதட்டமடைய தேவையில்லை என்றும், மனிதர்களின் தினசரி வேலை பளுவை குறைப்பதை நோக்கமாக கொண்டு, இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

வீட்டுக்குள் வந்த முதல் மனித வடிவ ரோபோட்.. பர்சனல் பாடிகார்டா?

வீட்டுக்குள் வந்த முதல் மனித வடிவ ரோபோட்.. மனிதர்கள் பதட்டமடைய தேவையில்லை:

இந்த நியோ பீட்டா ரோபோட்டை உருவாக்கிய போதே, 1X நிறுவனம் இதை மனிதர்களுடன் பாதுகாப்பாக இணைத்து வேலை செய்யும் படி உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரோபோட் விதிகளை எந்த சொல்நிலையிலும் இவை மீறாத வகையில் கோடிங் செய்து, உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மனிதர்களுடன் இணைந்து வேலை செய்யும் பொழுது மனித உருவம் மிக முக்கியமானது தானே. இதற்காகவே இந்த நியோ பீட்டா ரோபோவுக்கு மனித உருவம் வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளில் பொது நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த நியோ ரோபோ, அதன் உள்ளமைக்கப்பட்ட AI ஐப் பயன்படுத்தி தன்னாட்சி முறையில் பணிகளைச் செய்து முடிகிறது. ஏறக்குறைய இது மனிதர்களை போல யோசித்து, மனிதர்களை விட சிறப்பாக செயல்படுகிறது. இது சராசரி மனிதனின் உயரமான 5.5 அடி உயரத்தை கொண்டுள்ளது. இது 66 பவுண்டுகள் எடை கொண்டது. 66 பவுண்ட் எடை என்பது ஏறக்குறைய 30 கிலோ எடையை குறிக்கிறது.

நியோ பீட்டா ரோபோ, அதன் எடையை விட இருமடங்கு எடையை தூக்க கூடிய சக்தி கொண்டது என்று 1X நிறுவனம் தெரிவித்துள்ளது. 1X நிறுவனத்தின் தகவல் படி, இந்த மனித வடிவ நியோ பீட்டா ரோபோட் 154 பவுண்டுகள் எடையை அசால்ட்டாக தூக்கி வேலை செய்யக்கூடிய திறனை கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. 154 பவுண்ட் எடை என்பது ஏறக்குறைய 70 கிலோ எடையாகும்.

அடேங்கப்பா! 7.5 மைல் வேகத்தில் இந்த ரோபோட் ஓடுமா?

இந்த நியோ பீட்டா ரோபோட் 44 பவுண்டுகள் எடை உள்ள போர்டுகளை தூக்கி சுமந்து நடக்க கூடியது. 44 பவுண்ட் எடை என்று கூறுகையில், 20 கிலோ எடை வரை இந்த மனித வடிவ ரோபோவால் சுமக்க முடியும் என்று 1X நிறுவனம் கூறியுள்ளது. இந்த நியோ பீட்டா ரோபோட் 7.5 மைல் வேகத்தில் ஓடக்கூடிய திறனையும் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ரோபோவை இப்போது நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களில் தயாரித்திருக்கிறதாம். முதற்கட்டமாக, சில எண்ணிக்கை வீடுகளில் மட்டும் இதை நேரடியாக வழங்கி, அது மனிதர்களுடன் எப்படி இணைந்து வேலை செய்கிறது என்பதை நிறுவனம் கண்காணிக்க போகிறதாம். இதற்கு பிறகு, சில மேம்படுத்தல்களை வழங்கிய பிறகு, இந்த நியோ ரோபோட் பெரியளவு எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று 1X நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Humanoid Robot Company 1X Launches Neo Beta Bipedal Humanoid Robot Prototype for Home Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X