அரசு வேலையில் சேர்ந்த ரோபோ.! எங்கு தெரியுமா?

|

இப்போது தயாரிக்கப்படும் ரோபோ மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகிறது என்றுதான் கூறவேண்டும்,அதன்படி ஒரு பெண்ணைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் ரோபோ மாடல் ஆனது அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் கிளார்க்காக பணியாற்றுகிறது.

மாஸ்கோவிற்கு கிழக்கே

குறிப்பாக இந்த ரோபோ சைபீரியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் பொதுமக்களுக்காக சேவைகளை வழங்கத் துவங்கியுள்ளது,மேலும் நீண்ட இளஞ்சிவப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்ட இந்த ரோபைவைப் பார்த்தால் ஒரு ரஷ்ய பெண்ணாகவே தோன்றுகிறது. மாஸ்கோவிற்கு கிழக்கே 1,100 கிமீ (680 மைல்) தொலைவில் உள்ள Perm நகரில் இந்த ரோபோ பணியமர்த்தப்ப்ட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

 சான்றிதழ் தேவைப்படும்

அதாவது இதுவரை சட்டரீதியிலான சில நடைமுறைகளை நிறைவேற்றும்போது, குற்றவியல் பதிவு மற்றும் போதைப்பொருள் பழக்கம் இல்லை என்ற சான்றிதழ் தேவைப்படும் பணியில் மனிதர்க் செய்துவந்தனர். ஆனால் தற்போது ரோபோ இந்த பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.அதன்படி சம்பத்தப்பட்டவர்களின் கோப்புகளை பரிசீலித்து, அரசிடம் இருக்கும் தகவல்களையும் பரிசீலித்து குற்றவியல் பதிவு போதைப்பொருள் பழக்கம் இருக்கிறதா என்ற சான்றிதழ்களை வழங்கும் பணியில் இந்த ரோபோ பணியாற்றுகிறது.

அடடே! வாட்ஸ்அப் இல் இப்படி ஒரு சேவையா? இது தெரிந்தால் வங்கிக்கே போக வேண்டியது இல்லையே!அடடே! வாட்ஸ்அப் இல் இப்படி ஒரு சேவையா? இது தெரிந்தால் வங்கிக்கே போக வேண்டியது இல்லையே!

ரோபோ மாடல் சராசரி ரஷ்ய

மேலும் இந்த ரோபோ மாடல் சராசரி ரஷ்ய பெண்ணைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது என Promobot என்ற project-ஐ மேற்கொண்ட நிறுவனம் கூறியுள்ளது. பின்பு பல ரஷ்ய பெண்களின் தோற்றத்தை பகுப்பாய்வு செய்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த ரோபோ
உருவாக்கப்பட்டுள்ளது.

 அதிநவீன ரோபோ பொதுவான

இந்த அதிநவீன ரோபோ பொதுவான கேள்விகளை கேட்கும், பின்பு கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸ்கேனர் மற்றும் அச்சுப்பொறியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கிளார்க் ரோபோ, ஆவண தரவுத்தளத்திற்கான அணுகலையும் கொண்டுள்ளது.

Airtel ஸ்பெஷல்: இந்த 2 ஐபோன் மாடலுக்கான தள்ளுபடி கூப்பன் இங்கு தான் இருக்கு! மிஸ் பண்ணாதீங்க!Airtel ஸ்பெஷல்: இந்த 2 ஐபோன் மாடலுக்கான தள்ளுபடி கூப்பன் இங்கு தான் இருக்கு! மிஸ் பண்ணாதீங்க!

அலுவலகத்தின் தலைவர்

குறிப்பாக இந்த ரோபோவின் உதவியால் மனித உதவியின்றி பணிகளை முழுமையாக செய்துவிட முடியும் என பதிவு அலுவலகத்தின் தலைவர் லியோனிட் க்ரோமோவ் என்பவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Humanoid Clerk Helps To Cut Red Tape In Russian Government Office: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X