Iphone-க்கு ஓனராக சரியான வாய்ப்பு: பிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியுன் ஐபோன் 11, ஐபோன் 12!
Flipkart தளத்தில் ஜூலை 6 முதல் ஜூலை 10 வரை எலெக்ட்ரானிக்ஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் மாடல்களும் அடங்கும். பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகளை விரிவாக பார்க்கலாம்.

ஐபோனுக்கு எப்போதும் தனி வரவேற்பு
என்னதான் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலும் ஐபோனுக்கு என தனி வரவேற்பு பயனர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம், பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் மாடல்கள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஜூலை 6 முதல் ஜூலை 10 வரை எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தான் இந்த தள்ளுபடியும் கிடைக்கிறது.

மேம்பட்ட அம்சங்களோடு ஐபோன் 14 சீரிஸ்
ஐபோனின் சமீபத்திய மாடலாக ஐபோன் 13 சாதனம் தற்போது சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் மேம்பட்ட அம்சங்களோடு ஐபோன் 14 சீரிஸ் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடலுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்திய ஐபோன் 13 மாடலும் அமேசான், க்ரோமா போன்ற பல்வேறு தளங்களில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐபோன் 11 மற்றும் ஐபோன்12-க்கு பெரும் தள்ளுபடி
ஐபோன் 13 சாதனத்துக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டாலும் அதன் விலை சற்று உயர்ந்ததாகவே இருக்கிறது. எனவே நிலையான விலை பிரிவில் ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம். காரணம் சற்று முந்தைய மாடலான ஐபோன் 11 மற்றும் ஐபோன்12 க்கு பிளிப்கார்ட் சலுகை தின விற்பனையில் பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐபோன் மாடலுக்கு கிடைக்கும் வங்கி சலுகைகள்
பிளிப்கார்ட் தளத்தில் iPhone 11 சாதனத்துக்கு கிடைக்கும் தள்ளுபடி குறித்து பார்க்கைலாம். பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 11 சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் ரூ.42,999 என கிடைக்கிறது. அதேபோல் 128 ஜிபி வேரியண்ட் ரூ.47,999 என கிடைக்கிறது. கூடுதலாக சிட்டி வங்கியின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஐபோன் 11 சாதனத்தின் அடிப்படை வேரியண்டை ரூ.40,000 என வாங்கலாம். சலுகை இதோடு முடியவில்லை.

ரூ.30,000 விலையில் ஐபோன் வாங்கலாம்
பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 11 சாதனத்தை ரூ.30,000 என வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் செய்யும் சாதனங்களின் தரம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் நல்ல நிலையில் இருந்தால் சுமார் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு வழங்கப்படுகிறது.

ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கும் தள்ளுபடிகள்
ஐபோன் 12 சாதனத்துக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் தள்ளுபடி குறித்து பார்க்கலாம். ஐபோன் 12 சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.54,999 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் 128 ஜிபி வேரியண்ட் ரூ.59,999 எனவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.69,999 எனவும் இருக்கிறது. கூடுதலாக சிட்டி வங்கியின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த ஐபோன் 12 சாதனத்தை ரூ.52,999 என வாங்கலாம்.

ஐபோன் வாங்க திட்டமிட்டால் அதற்கு சரியான நேரம்
அதேபோல் இதற்கும் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 12 சாதனத்தை ரூ.42,000 என வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் செய்யும் சாதனங்களின் தரம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் நல்ல நிலையில் இருந்தால் சுமார் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் மதிப்பு வழங்கப்படுகிறது. நிலையான விலை பிரிவில் நீங்கள் ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.


Click it and Unblock the Notifications