பாப் அப் கேமரா அம்சத்தோடு அறிமுகம்: ஹூவாய் ஒய்9ஏ சிறப்பம்சங்கள்!
ஹூவாய் ஒய் 9 ஏ குவாட் கேமரா அம்சத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பாப்-அப் செல்பி கேமரா
பாப்-அப் செல்பி கேமரா அம்சத்தோடு சமீபத்திய ஒய் 9 ஏ ஸ்மார்ட்போனை ஹூவாய் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குவாட் ரியர் அம்சம், 3D வடிவமைப்பு, நானோ மேற்பரப்பு மற்றும் 40W வரை வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களை இது கொண்டுள்ளது. கடந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூவாய் என்ஜாய் 20 ப்ளஸின் மாற்றம் செய்யப்பட்ட பதிவாக ஹூவாய் ஒய் 9 அறிமுகமாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி ஓவர் டைமன்ஷன் 720 (MT6853) சிப்செட்டோடு வருகிறது.

ஹூவாய் ஒய் 9ஏ அம்சங்கள்
ஹூவாய் ஒய் 9ஏ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது இரட்டை சிம்(நானோ), ஆண்ட்ராய்ட் 10 ஓஎஸ் அடிப்படையாக கொண்டு இயக்கப்படுகிறது. 20:9 விகித அளவில் 6.63 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மாலி-ஜி 52 எம்சி 2ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் உடனும், ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலி மூலமாகவும் இயக்கப்படுகிறது.

ஹூவாய் ஒய் 9 ஏ கேமரா வடிவமைப்பு
ஹூவாய் ஒய் 9ஏ கேமரா வடிவமைப்பு குறித்து பார்க்கையில் இது 64 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா 2 மெகாபிக்சல் ஆழ லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களை ஹூவாய் ஒய் 9ஏ கொண்டுள்ளது. பாப் அப் அம்சங்களாக இதில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது.

128ஜிபி உள்சேமிப்பு வசதி
ஹூவாய் ஒய் 9ஏ 128ஜிபி உள்சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256 ஜிபி விரிவாக்கம், 4ஜி எல்டிஇ வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளோடு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் உள்ளது.

4300 எம்ஏஹெச் பேட்டரி
ஹூவாய் ஒய் 9ஏ 4300 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்தோடு 40 வாட்ஸ் சூப்பர் சார்ஜ் வரை ஆதரிக்கிறது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா போன்ற நாடுகளில் 22.5 வேகமான சார்ஜி ஆதரவு 4200 எம்ஏஹெச் பேட்டரியோடு ஹூவாய் ஒய் 9 ஏ வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications