ரூ.10,000-திற்கு இப்படி ஒரு 5G போனா? அடேங்கப்பா.. ஆரம்பமே அளப்பறையா இருக்கே.. எந்த மாடல்?
ஹவாய் (Huawei) நிறுவனம் அதன் கீழ் இயங்கும் பட்ஜெட் செக்மென்ட் பிரண்டான விகோ (Wiko) கீழ் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 5ஜி ஆதரவுடன், 6.75" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனை ஹவாய் நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீனாவில் இப்போது முதற்கட்டமாக ரூ. 10,000 விலையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போனில் ஹவாய் நிறுவனம் என்னென்ன அம்சங்களை வழங்கி உள்ளது. இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன? என்பது போன்ற ஒட்டுமொத்த தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.75" இன்ச் அளவு கொண்ட LCD டிஸ்பிளேவுடன் (display) வருகிறது.

விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G):
இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் (90Hz refresh rate) உடன் 720 x 1600 பிக்சல் கொண்ட ரெசொலூஷன் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (AOD) சப்போர்ட் உடன் வருகிறது. இந்த புதிய விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 700 பிராசஸர் (Dimensity 700 processor) உடன் வருகிறது.
இந்த சிப்செட் ஆனது, 7nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிப்செட்டாகும். இந்த ஆக்டா-கோர் சிப்செட் 2.2GHz இல் இயங்கும் இரண்டு A76 கோர்களையும், 2.0GHz இல் A55 கோர்களையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்மார்ட்போனின் செயல்திறனை சமநிலைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பல விதமான ஸ்டோரேஜ் மற்றும் ரேம் அம்சத்துடன் வருகிறது.
இந்த புதிய விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஹவாய் நிறுவனத்திற்கு சொந்தமான ஹார்மோனி ஓஎஸ் உடன் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 14 போன்ற அதே இயங்குதளத்தை ஹவாய் தனக்கு தானே சொந்தமாக உருவாக்கிக்கொண்டது.
புதிய விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போன் சாதனம் ஹார்மோனி ஓஎஸ் கனெக்ட் சான்றுடன் வருகிறது. இதன் மூலம் மற்ற சாதனங்களையும் பயனர்கள் இணைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 13MP ஏஐ பவர் ரியர் கேமராவுடன் வருகிறது. இது 5000mAh பேட்டரி உடன் வருகிறது.
விகோ ஹை என்ஜாய் 70 5ஜி விலை (Wiko Hi Enjoy 70 5G Price):
இந்த புதிய விகோ ஹை என்ஜாய் 70 5ஜி (Wiko Hi Enjoy 70 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6GB+128GB, 8GB+128GB, and 8GB+256GB வேரியண்ட் மாடல்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6GB+128GB வேரியண்ட் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,000 விலைக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதன் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு Hi Enjoy 70 Pro 5G மாடலை நிறுவனம் இந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications








