தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டீங்க- ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இணைமாற்று- ஹூவாயின் ஹார்மோனி ஓஎஸ்!

|

கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டிரம்ப் அவசர நிலை பிரகடனப்படுத்தினார், அதில் சீனாவில் தொலைத் தொடர்பு நிறுவமான ஹூவாய் மற்றும் இதோடு தொடர்புரைய 70 நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை வாங்க தடை, அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் தயாரிப்புகளை பயன்படுத்த தடை என, சீன நிறுவனமான ஹுவாய் மீது அதிபர் டிரம்ப் ஒரேநேரத்தில் இரட்டைத் தாக்குதலை தொடுத்தார்.

சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம்

சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம்

சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் வழியாக ஊடுருவி அரசு, ராணுவம் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்புகள் சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தொலைத்தொடர்பு கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார். இந்த உத்தரவு பிறப்பித்தவுடன், ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்தது.

70 துணை நிறுவனங்களுக்கு தடை

70 துணை நிறுவனங்களுக்கு தடை

ஹூவாய் மற்றும் 70 துணை நிறுவனங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தார். இந்த நிறுவனங்களுக்கு சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக முன்னாள் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த தடை காரணமாக ஹூவாஸ் நிறுவனம் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் உட்பட பல முக்கிய சேவை

ஆண்ட்ராய்டு இயங்குதளம் உட்பட பல முக்கிய சேவை

கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உட்பட பல முக்கிய சேவைகள் ஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து நிறுவனம் பல்வேறு நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. ஹூவாய் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் பல மடங்கு குறைந்தது. ஹூவாய் நிறுவனம் அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தொழில்நுட்ப நிறுவனங்களிடையே இருந்தது.

கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம்

கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம்

இதுகுறித்து கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட தரவுகள்படி, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 17 சதவீதமாக இருந்த ஹூவாய் நிறுவனத்தின் சந்தை நடப்பாண்டின் முதல் காலாண்டில் 4 சதவீதமாக குறைந்தது. ஹூவாய் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு குறைந்தது.

ஹார்மோனி ஓஎஸ் என்ற சொந்த இயங்குதளம்

ஹார்மோனி ஓஎஸ் என்ற சொந்த இயங்குதளம்

இந்த நெருக்கடியை சமாளிக்க தொடர் நடவடிக்கையில் ஹூவாய் நிறுவனம் களமிறங்கியது. இதன் ஒருபகுதியாக ஹார்மோனி ஓஎஸ் என்ற சொந்த இயங்குதளத்தை உருவாக்கி ஹூவாய் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட் டிவிகள், மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்களில் இந்த இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹார்மோனி ஓஎஸ்

ஹார்மோனி ஓஎஸ்

படிப்படியாக பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களில் இந்த ஓஎஸ் பயன்படுத்தப்பட்டு தேர்ச்சி அடைந்தது. ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் ஹார்மோனி ஓஎஸ்-ல் ஒரு முக்கிய அப்டேட்டை ஹூவாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹார்மோனி ஓஎஸ்-ல் இயங்கும் மேட்பேட் புரோ டேப்லெட்டுகள், ஹூவாய் வாட்ச் 3 ஸ்மார்ட் கைக்கடிகாரங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவம்

வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவம்

இது குறித்து விளக்கிய முன்னணி டெவலப்பர் வாங் செங்லு, ஹார்மோனி ஓஎஸ் மூலம் பல்வேறு சாதனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த இயங்குதள பயனர்கள் கணினிகள் முதல் பிற இணைக்கப்பட்ட சாதனங்கள் வரை எல்லாவற்றிலும் கோப்புகள், ஆவணங்களை எளிதில் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.

Source: bloombergquint.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei Technologies Unveiled Harmony OS Software to Work Across Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X