நான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹூவாய் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, அதன்படி இந்நிறுவனம் ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸமார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நான்கு ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் விரைவில் இந்தியாவில் ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

எதிர்பார்த்த சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ஆக்டோ-கோர் கிரிண் 810எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பிள்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா வசதி:
ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதனுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை:
இந்திய விலைமதிப்பு...
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.22,000.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.25,000.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.28,000.


Click it and Unblock the Notifications