Home
News

மாஸ் காட்டிய ஹூவாய்.. சஸ்பென்ஸ் வைத்து ஹைப் ஏற்றிய புது Huawei Nova 11 SE.. விலை என்ன?

குறைந்த விலையில் எல்லா அம்சங்களையும் ஒரே போனில் பேக் செய்து, அதற்கு பட்ஜெட் பிரைஸ் டேக் ஒட்டி விற்பனை செய்யும் திறமை உண்மையிலேயே சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த வகையில் தான் ஹூவாய் (Huawei) செயல்படுகிறது.

ஹூவாய் (Huawei) நிறுவனம் இறுதியாக ஹூவாய் நோவா 11 எஸ்இ (Huawei Nova 11 SE) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன், Huawei நிறுவனத்தின் இணையதளத்தில் 108 எம்பி பிரைமரி கேமராவுடன் கூடிய, மெல்லிய ப்ரொஃபைல் உடன் காணப்பட்டுள்ளது.

மாஸ் காட்டிய ஹூவாய்.. சஸ்பென்ஸ் வைத்து ஹைப் ஏற்றிய Huawei Nova 11 SE..

ஹூவாய் நோவா 11 எஸ்இ (Huawei Nova 11 SE):

ஹூவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்ச தகவல்களை வைத்து பார்க்கையில், இது 5G இணைப்பு இல்லாத ஸ்மார்ட்போன் என்பது உறுதியாகியுள்ளது. அதில் சிப்செட் விவரங்களை முழுவதுமாக தவிர்க்க ஹூவாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த புதிய ஹூவாய் நோவா 11 எஸ்இ சீனாவில் உள்ள ஹூவாய்க்கு சொந்தமான ஆன்லைன் ஸ்டோரான விமால் (Vmall) வழியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

விமால் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை வைத்து பார்க்கையில், இந்த ஹூவாய் நோவா 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 (snapdragon 680) மூலம் இயக்கப்படுகிறது. இது 2.4 GHz சிபியு (CPU) உடன் 6nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்ட LTE-மட்டும் கொண்ட சிப்செட் ஆகும். சிப்செட் பற்றிய தகவல் தெரிந்தாலும் கூட, இந்த போனின் ரேம் பற்றிய தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த ஹூவாய் நோவா 11 எஸ்இ ஸ்மார்ட்போன் முழு HD+ திறனுடன் 10 பிட் கொண்ட 6.67' பிளாட் OLED பேனலைக் கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 100% DCI-P3 வண்ண வரம்பைக் கொண்டுள்ளது. இது 1080p வீடியோவைப் பதிவுசெய்யும் 32 எம்பி செல்ஃபி கேமராவிற்கு மையமாக கொண்ட பன்ச் ஹோல் நாட்ச் உடன் வருகிறது.

ஹூவாய் நோவா 11 SE ஆனது 7.39 மிமீ மிக மெல்லிய ப்ரொஃபைலை கொண்டுள்ளது. இது 4,500mAh கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 66W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 32 நிமிடங்களில் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்கிறது. சார்ஜர் மற்றும் பொருத்தமான கேபிள் இந்த போனின் பாக்ஸ் உடன் வருகிறது. புதிய OS உடன் 100 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களைக் கொண்ட குடும்பத்துடன் இந்த போன் இணைகிறது.

இது ஹார்மோனி ஓஎஸ் 4 (HarmonyOS 4) உடன் இயங்குகிறது. இது புதுப்பிக்கப்பட்ட நோட்டிபிகேஷன் சென்டர், அபாயகரமான பயன்பாடுகளுக்கான சிறந்த அனுமதி மேலாண்மை மற்றும் அறிவிப்புப் பட்டியில் அமர்ந்து தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான லைவ் விண்டோ உடன் வருகிறது. இந்த போனின் மற்ற சிறப்பம்சங்களை பொறுத்த வரையில் NFC, ஆஃப்லைனில் பணம் செலுத்துவதற்கான தகவலைச் சேமிக்கும் விருப்பம்.

டூயல் நானோ சிம் ஸ்லாட் மற்றும் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவை அடங்கும். ஹூவாய் நோவா 11 எஸ்இ (Huawei nova 11 SE) ஆனது கிரீன், வைட், மற்றும் பழசக் நிறங்களில் வருகிறது. இதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் CNY 1,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் CNY 2,199 விலையில் வருகிறது.

இது முறையே, ரூ.22,000 மற்றும் ரூ.25,000 விலையில் வருகிறது. நவம்பர் 3 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இது மிகவே விரைவில் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Nova 11 SE Launched With 108 MP Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X