ஹவாய் அறிமுகப்படுத்தும் புதிய மீடியாபேட் 3டி & மீடியாபேட் 3டி லைட்.!
தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஹவாய் மீடியாபேட் 3டி மற்றும் மீடியாபேட் 3டி தற்போது அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான ஹவாய் தற்சமயம் இரண்டு லேப்லேட் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஹவாய் மீடியாபேட் 3டி மற்றும் மீடியாபேட் 3டி தற்போது அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லேட் மாடல்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் மீடியாபேட் 3டி மற்றும் மீடியாபேட் 3டி லைட் பொதுவாக ஸ்னாப்டிராகன் 435எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டு டேப்லேட் மாடல்கள் டிஸ்பிளே பொறுத்தவரை சில மாறுபாடுகள் உள்ளது எனக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:
புதிய மீடியாபேட் 3டி பொதுவாக 10-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாபேட் 3டி லைட் 8-இன்ச்டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:
இந்த இரண்டு டேப்லேட் மாடல்களும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் மீடியாபேட் 3டி பொறுத்தவரை 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஒசி செயலி கொண்டுள்ளது. அடுத்து மீடியாபேட் 3டி லைட் பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
மீடியாபேட் 3டி பொறுத்தவரை 2/3ஜிபி ரேம் மற்றும் 16/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் மீடியாபேட் 3டி லைட் பொதுவாக 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:
இரண்டு டேப்லேட் மாடல்களும் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4800எம்ஏஎச்:
மீடியாபேட் 3டி மற்றும் மீடியாபேட் 3டி பொறுத்தவரை 4800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications