அல்டிமேட் Gold Dragon வாங்க நீங்க ரெடியா? சுத்தமான 24 கேரட் கோல்டு Tri-Fold Mobile.. விலை என்னனு பாருங்க..
2500 வருட பழமையான புராணக் கதையின் பின்னணியுடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தங்கத்தால் ஆன ட்ரிபிள் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் (triple fold smartphone) சாதனமான கோல்டு டிராகன் (Gold Dragon) பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இது தான் 24 கேரட் கோல்டு (24 carat gold) உடன் கேவியர் (Caviar) நிறுவனம் உருவாக்கியுள்ள அல்டிமேட் கோல்டு டிராகன் ஸ்மார்ட்போன். இந்த போனின் தலை முதல் பாதம் வரை எல்லாமே முழுக்க முழுக்க 999 சான்றளிக்கப்பட்ட சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
வாருங்கள் இந்த போனின் விலை மற்றும் மற்ற விபரங்களை தெரிந்துகொள்ளலாம். உலகின் முதல் ட்ரிபிள் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் சாதனம் (world's first triple fold smartphone) என்ற பெருமைக்கு சொந்தமான ஹவாய் மேட் எக்ஸ்டி (Huawei Mate XT) ஸ்மார்ட்போனில் இருந்து தான் இந்த அல்டிமேட் கோல்டு டிராகன் (Ultimate Gold Dragon) ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போனை மிகவும் பிரபலமான கேவியர் நிறுவனம் தான் உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

அல்டிமேட் கோல்டு டிராகன் வாங்க நீங்க ரெடியா? உலகின் முதல் சுத்தமான 24 கேரட் கோல்டு Tri-Fold Mobile:
கேவியர் நிறுவனம் பல ஆண்டுகளாக ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) போன்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பிரீமியம் சாதனங்களை (Premium smartphones) இன்னும் கூடுதல் ப்ரீமியமாக மாற்றும் வகையிலான பிரத்தியேக டிசைனிங்கை செய்து விற்பனை செய்து வருகிறது. கேவியர் நிறுவனம் இதற்கு முன்பு ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களை முதலை தோல் (alligator leather), பாம்பின் தோல் (Python skin), வைரம் (diamond) மற்றும் பூமியில் அரிதாக கண்டறியப்பட்ட விண்கல் துகள்கள் (meteorite fragments) போன்றவற்றால் ஸ்மார்ட்போனை மருவடிவமைப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கேவியர் நிறுவனம் முழுக்க-முழுக்க 24 கேரட் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட ட்ரிபிள் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் (purest 24 carat gold triple foldable smartphone) சாதனத்தை உருவாகியுள்ளது. இதை கேவியர் நிறுவனம் ஹவாய் மேட் XT அல்டிமேட் டிசைன் கோல்டு டிராகன் (Huawei Mate XT Ultimate Design Gold Dragon) என்று பெயரிட்டுள்ளது. பூமியில் கிடைக்கக்கூடிய மிகவும் சுத்தமான தங்கத்தால் இந்த போனை கேவியர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஹவாய் மேட் XT அல்டிமேட் டிசைன் கோல்டு டிராகன் (Huawei Mate XT Ultimate Design Gold Dragon):
இந்த போனின் வடிவமைப்பு பின்னணியில் கேவியர் நிறுவனம் 2500 ஆண்டுகள் பழமையை வரலாற்றை (2500 year old history) சேர்த்து செதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இந்த போனில் இருக்கும் தங்கத்தை காட்டிலும், இந்த போனுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள வரலாறு இங்கு மதிப்புமிக்க சொத்து போல் தெரிகிறது. இந்த அல்டிமேட் கோல்டு டிராகன் போனில் (ultimate gold dragon phone) உள்ள வடிவங்கள், மிங் வம்சத்தின் லாங்குவான் வாள்களால் ஈர்க்கப்பட்டதாக (Longquan swords of the Ming Dynasty) பிராண்ட் கூறியுள்ளது.
அதே நேரத்தில் இந்த போனின் பெயரில் உள்ள டிராகன் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் குறிக்கிறது என்றும் கூறியுள்ளது. லாங்குவான் வாள் சீனாவில் ஒரு கலாச்சார பாரம்பரியமாகும், மேலும் அதன் வரலாறு மாஸ்டர் வாள் தொழிலாளி ஓ யெசியுடன் (master swordsmith Ou Yezi) தொடர்புடையது. இவர் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஏகாதிபத்திய உத்தரவின் பேரில் லாங்குவான் பகுதிக்குச் சென்று சிறந்த ஆயுதங்களை உருவாக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவாய் மேட் XT அல்டிமேட் டிசைன் கோல்டு டிராகன் விலை (Huawei Mate XT Ultimate Design Gold Dragon Price):
இத்தகைய சிறப்புமிக்க ஹவாய் மேட் XT அல்டிமேட் டிசைன் கோல்டு டிராகன் (Huawei Mate XT Ultimate Design Gold Dragon) போனை கேவியர் நிறுவனம் 1TB மற்றும் 256GB ஆகிய இரண்டு வேரியண்ட் மாடல்களில் மட்டும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், Huawei Mate XT Ultimate Design Gold Dragon 1TB மாடல் $18,200 விலையிலும் 256GB மாடல் $17, 340 டாலர் விலையிலும் (price) விற்பனைக்கு வந்துள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை முறையே ரூ. 15,75,653 மற்றும் ரூ. 15,01,199 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனை வாங்க விரும்புபவர்கள் கேவியர் (caviar) நிறுவனத்தின் தனிப்பட்ட வலைத்தள பக்கம் மூலம் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








