புதிய Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்.! இந்த போனில் இப்படி ஒரு பவர்ஃபுல் சிப்செட்டா?

|

புதிய Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Huawei நிறுவனம், Weibo வழியாக, இந்த அறிமுக நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் Huawei Mate 50, Huawei Mate 50e, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகிய நான்கு மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இவை Kirin 9000S சிப்செட் உடன் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Huawei Mate 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Mate 40 மாடல்களுக்குப் பின் வெளிவருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஃபிளாக்ஷிப் தொடர் மாடல்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று வெளியிடப்படும். இருப்பினும், போன்களின் வெளியீட்டு நேரத்தையும் சரியான மோனிக்கரையும் நிறுவனம் அதன் இடுகையில் குறிப்பிடவில்லை.

Huawei Mate 50 சீரிஸ் வரிசையில் எத்தனை மாடல் தெரியுமா?

Huawei Mate 50 சீரிஸ் வரிசையில் எத்தனை மாடல் தெரியுமா?

Huawei Mate 50, Huawei Mate 50e , Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் HarmonyOS 3.0 இல் இயங்கும். கடந்த கசிவுகளின்படி, Huawei Mate 50, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, Huawei Mate 50e ஆனது, Snapdragon 778G சிப்செட்டைக் கொண்டிருக்கும்.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

Huawei Mate 50 போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Huawei Mate 50 போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

இந்த 4 புதிய மாடல்களும் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது இங்கே. Huawei Mate 50 ஆனது முழு HD உடன் கூடிய 1,225 x 2,800 பிக்சல்கள் கொண்ட 90Hz ரெஃபிரஷ் ரேட் வீதத்துடன் செயல்படும் 6.56' இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும். இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜை பேக் செய்யும் எனக் கூறப்படுகிறது.

Huawei Mate 50 Pro டிவைஸில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Huawei Mate 50 Pro டிவைஸில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இதில் 50 மெகாபிக்சல் IMX766 சென்சார் மூலம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 66W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,400mAh பேட்டரி ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை 6.78'இன்ச் அல்லது 6.81' இன்ச் கொண்ட முழு HD+ உடன் கூடிய 1,212 x 2,612 பிக்சல்கள் கொண்ட வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெஃபிரஷ் ரேட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா அம்சம்

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா அம்சம்

இது 12ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 512ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜை பேக் செய்யும். இதில் 50 மெகாபிக்சல் IMX800 சென்சார் மூலம் ஹைலைட் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை நாம் எதிர்பார்க்கலாம். இதில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Huawei Mate 50e போனில் என்ன இருக்கும்?

Huawei Mate 50e போனில் என்ன இருக்கும்?

அடுத்தபடியாக, Huawei Mate 50e ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.28' இன்ச் முதல் 6.56' இன்ச் முழு HD+ கொண்ட 1,225 x 2,800 பிக்சல்கள் OLED டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை பேக் செய்யும். இது 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரியை பேக் செய்யும்

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei Mate 50 Huawei Mate 50e Huawei Mate 50 Pro Huawei Mate 50 RS Launch Confirmed for September 6

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X