ஹூவாய் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது

By Meganathan
|

ஹூவாய் நிறுவனம் ஹானர் 4சி ஸ்மார்ட்போனினை ரூ.8999க்கும், ஹானர் பீ ஸ்மார்ட்போனினை ரூ.4999க்கும் இந்தியாவில் வெளியிட்டது. இந்தத இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ப்ரெத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹானர் 4சி 5 இன்ச் டிஸ்ப்ளே 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கியுள்ளதோடு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஹைசிலிகான் கிரின் 620 பிராசஸர் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம், ப்ளூடூத் வி4.0, வைவை, மைக்ரோயு எஸ்பி வி2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2550 எம்ஏஎஹ் பேட்டரியும் கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

ஹூவாய் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது

ஹீவாய் ஹானர் பீ சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் FWVGA எல்சிடி டிஸ்ப்ளே 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC7731 குவாட்கோர் பிராசஸர் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத் வி4.0, வைபை, மைக்ரோ யுஎஸ்பி வி2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 1750 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Huawei launched two smartphones — the Honor 4C at a price of Rs 8999, and a budget smartphone Honor Bee at a price of Rs 4999 in India today.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X