Home
News

ஹூவேய் வழங்கும் சூப்பர் பாஸ்ட் டேட்டா கார்டு!

By Karthikeyan
ஹூவேய் வழங்கும் சூப்பர் பாஸ்ட் டேட்டா கார்டு!

சீனாவைச் சேர்ந்த ஹூவேய் டெக்னாலஜிஸ் சமீபத்தில் ஒரு புதிய ப்ளக் மற்றும் லிங்க் டேட்டா கார்டை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த டேட்டா கார்டிற்கு ஹைலிங்க் இ303சி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய டேட்டா கார்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த கார்டை யுஎஸ்பி போர்ட்டில் பொருத்திய 15 வினாடிகளுக்குள் இணைய தளத்தை இணைத்துவிடும். அந்த அளவிற்கும் இந்த டேட்டா கார்டு அதிக வேகத்தோடு இயங்கும் தன்மை கொண்டது.

அதாவது தற்போது இந்திய சந்தையில் இருக்கும் டேட்டா கார்டுகளை விட இந்த புதிய டேட்டா கார்டு 75 சதவீதம் அதிக வேகம் கொண்டது. இந்த டேட்டா கார்டு பல சூப்பாரன தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

குறிப்பாக இந்த டேட்டா கார்டில் எட்ஜ், ஜிபிஆர்எஸ், ஜிஎஸ்எம் போன்ற வசதிகள் உள்ளன. அதோடு எச்எஸ்பிஎ + நெட்வொர்க் மற்றும் 7.2 எம்பிபிஎஸ் டவுன்லிங்க் போன்றவற்றையும் இந்த சாதனம் சப்போர்ட் செய்கிறது.

இந்திய பயன்பாட்டாளர்கள் இணையதள வசதியை மிக சூப்பராக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஒரு வருடமாக இந்த டேட்டாக் கார்டை தயாரித்து வழங்குவதாக ஹூவேய் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் திரு. சாங்சின் கூறுகிறார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஹூவேய் நிறுவனம் ஹைலிங்க் இ353 என்ற டேட்டா கார்டை இந்திய சந்தையி்ல் களமிறக்கியது. ஆனால் இந்த புதிய டேட்டா கார்டை இந்த மாதமே இந்தியாவில் களமிறக்குகிறது. இதன் விலை ரூ.2199 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X